பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇17



இருக்கிறது? என்று உருப்படி இல்லாத கேள்விகளை அவன் கேட்கவில்லை.

 "நீண்ட காலம்; ஒருவனுக்கு ஒருத்தி என்று இரட்டையராகவே வாழ்ந்து காலம் கடத்திவிட்டீர்கள்; இப்பொழுது மகன் பிறந்தான் என்று கேள்விப்பட்டேன்; என் வாழ்த்துகள்" என்றான். நந்தகோபன் முகத்தில் குமிழ் சிரிப்பு அமிழ்து எனத் தோன்றியது.
 அவன் வசுதேவனைத் திருப்பிக் கேட்டான். "இப்பொழுது எத்தனையாவது?" என்று. விடுமுறைக்குப் பின் மாணவனைப் பார்த்து மற்றவர்கள் கேட்பது போல இருந்தது அந்த வினா.
 "எட்டாவது எட்டிப் பிடித்து இருக்கிறேன்; ஒன்று கூடத் தேறவே இல்லை; படிப்படியாய் ஆறு பேரை அவன் தீர்த்துவிட்டான், ஏழாவது! அது முற்றுப் பெறவில்லை; எட்டாவது பெண்; அவள் வான வேடிக்கை காட்டிவிட்டுப் போய்விட்டாள். "பெற்ற குழந்தை தன்னிடத்தில் இல்லையே" என்று தேவகி பேதலிக்கிறாள்.
 "ஏற்கெனவே என் ஒரு குழந்தையை உரோகிணி பெற்றிருக்கிறாள்; அவன் திண்ணிய உடம்பும் கண்ணிய தோற்றமும் பெற்றவன். அவனை நான் எண்ணியபடி அங்கு விட்டுவைத்திருக்கிறேன். கம்சன் பார்வை அவன் மீது படக்கூடாது என்பதால்தான் உரோகிணியை நம் ஊரில் விட்டு வைத்திருக்கிறேன். அவன் ஒருவன்தான் என் பெயரைச் சொல்ல ஊரில் வளர்கிறான்" என்று தன் வமிசாவளியைப் படித்துக் காட்டினான். "அவனை நீ தான் பொறுப்பாய் இருந்து காக்க வேண்டும். அவனைப் பற்றித்தான் என் கவலை."
 "அது மட்டுமன்று; பிள்ளை பிடிக்கிறவர்கள் நகரத்தில் பெருகி விட்டார்கள்; பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்; இப்போது புதிதாக ஒரு