பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇19



செய்யாமல் கொன்றுவிட்டு வருமாறு இட்ட ஏவல் அவள்மீது விழுந்தது.

 "எங்கெங்கே புதிய குழந்தைகள் பிறந்து இருக்கின்றன?" என்று கேட்டுக்கொண்டே வந்தால் மக்கள் கணக்கெடுப்புத் துறையைச் சார்ந்தவள் என்று மற்றவர் கருதிக் கொண்டனர்; வண்ண ஆடைகளை உடுத்திக் கொண்டு கண்ணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்; விசாரித்து அறிந்தாள்; அது ஒரு அதி அற்புதமான குழந்தை என்று அவன் கறுப்பு நிறத்தைப் பற்றிச் சிறப்புறப் பேசிக்கொண்டிருந்தனர். எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? பத்து நாளைக்கு முன் பிறந்த குழந்தை என்பது உறுதியாகிவிட்டது. எத்தனை உயிர்களை அழிக்கின்றாளோ அத்தனையும் அவளுக்குக் காசு. கோகுலத்தில் இந்த வீடே மிகப் பெரியதாய் இருந்தது; பாலும், தயிரும் பெருகி ஓடிய பண்ணையாய் இருந்தது; செல்வம் கொழித்து இருந்தது; மகளிர் காதிலும், மூக்கிலும்

பொன் வளையங்கள் தொங்கிக் கொண்டிருந்தன; எங்குப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் பரபரப்பாயும் சுறுசுறுப்பாயும் இருந்தனர்.

 சுய உருவில் சென்றால் அவர்கள் நையப் புடைத்து விடுவார்கள். அதனால் அயல் உருவில் தன்னை அலங்கரித்துக்கொண்டு நல்ல பெண்மணியாய்ச் சென்றாள். "லட்சுமி அவள் நாயகனிடமிருந்து சண்டை போட்டுக் கொண்டு இங்கே வந்து விட்டாள்" என்று பேசிக் கொண்டார்கள்.
 தேவகியும் உரோகிணியும் தேவ மகள் அவள் உள்ளே செல்வதைப் பார்த்தனர்; அதனால் அவர்கள் பெருமை அடைந்தனர்; பெரிய வீட்டுப் பெண் என்பதனால் அதில் ஒரு பெருமையைக் கண்டனர்; தடுத்து நிறுத்த வேண்டும்