பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇47



சங்காசுரன் மரணம் நங்கையர் சிலருடன் கண்ணனும் அவன் தமையனும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஒர் இரவு பிருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் பேரழகும் பாட்டும் ஆட்டமும் இவ்ர்களை மிகவும் கவர்ந்திருந்தன. அப்பொழுது அவ்விரவுப் பொழுதில் சங்காசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கு வந்தான்; அவன் குபேரனின் நண்பன்; அதனால் அவன் மிக்க செல்வம் உடையவனாய் இருந்தான். அதைக் கண்டு அவன் புழுங்கினான். "இந்த இடைச் சிறுவர்களுக்கு, இடைஅழகு மிக்க அழகியர் எப்படிக் கிடைத்தார்கள்; இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. செல்வம் மிக்கு உடைய எனக்கே இவர்கள் உரியர்" என்று உரிமை கொண்டாடினான்; வில்ை பேசிப் பார்த்தான்; அவன் வலையில் அவர்கள் விழுவதாய் இல்லை; அவன் தன் அசுரத் தன்மையால் அவர்களை வலிய இழுத்துக்கொண்டு வடநாடு நோக்கிச் சென்றான். அவர்கள் தம்மைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்துக் கொண்டே சென்றனர். - - கண்ணனும் பலராமனும் அவர்களைப் பின் தொடர்ந்து அவனை மடக்கிவிட்டனர், அப்பெண்களை மட்டும் பலராமன் வசம் ஒப்புவித்துவிட்டுக் கண்ணன் அவன்பின் தொடர்ந்தான். அவன் எங்குச் சென்றாலும் விடுவதாக இல்லை. இறுதியில் அவன் மீது பாய்ந்து தன் கையாலேயே குத்திக் கொன்றான். அவன் வசம் விலை மதிப்பு மிக்க சங்கு ஒன்று இருந்தது; அந்த ஒளி மிக்க சங்கினைக் கொண்டு வந்து கண்ணன் பலராமனுக்குத் தந்தான். சங்கு அவன் சொத்து; அதனால் அந்த அசுரன் சங்காசுரன் எனப் பெயர் வழங்கப்பட்டான்.