பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70◇ ராசீ



மணந்தால் மன்னர்குலமே மாசுபட்டுவிடும் என்பது அவன் போக்காய் இருந்தது.

கண்ணனின் சாதனைகள் பலவும் அவன் லீலைகள் என்று பாரினில் எங்கும் பேசத் தொடங்கினர்; கலைஞர் நாட்டியங்களிலும் நாடகங்களிலும் அவன் சாதனைகளை நடித்துக் காட்டினர்; பாடல்களும் அவன் பெருமையைச் சொல்வனவாய் எழுந்தன.

குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சீராய் உடை உடுத்தும் போதெல்லாம் கண்ணனைப் போலக் கொண்டையும் பீலியும் போட்டு அழகு பார்த்தனர். கண்ணன் புகழ் பேசும் இயக்கம் ஒன்று எங்கும் பரவிக் கிடந்தது. கோபியர் கண்ணனொடு ஆடும் கோலாகல ஆடல்களை மற்ற இளைஞர்களும் ஆடத் தொடங்கினர். குடிப்பிறப்பில் தாழ்ந்த ஒருவன் உயர்பதவிகள் வகிக்கக் கூடாது. அதற்கு இந்த மண உறவு உதவி செய்யும் என்பதால் தடை செய்ய முற்பட்டான். அதற்காகவே அவன் அவளை மணக்க முன் வந்தான்.

உருக்குமணியின் தந்தை பீஷ்மகனுக்குத் தன் மகளை சிசுபாலனுக்குக் கொடுக்க மனம் இல்லை. அவன் வசதி மிக்கவன்; அரசன் மகன்; பராக்கிரம் உள்ளவன்; தன் நண்பன் என்றெல்லாம் உருக்குமி அவனிடம் சொல்லி வற்புறுத்தினான். குடும்பத்துக்கு மூத்த பிள்ளை; முரடனும் கூட அவன் பேச்சைத் தள்ள முடியவில்லை.

உருக்குமணி அறிவு நிரம்பியவள்; பெரிய பாரம்பரியம் உடையவள்; அதனால், அவசரப்படவில்லை; காதல் நெறியை மகளிர் பள்ளியில் பயின்றவள்; உடன் போக்கு என்னும் துறையைப்பற்றி அறிந்தவள்; பெற்றோர் எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததால் மற்று ஒரு வார்த்தையும்