பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 © Tाd செய்துவிட்டனர். இச் செய்தி கேட்டுக் கண்ணன் பின்னால் சிரித்துக்கொண்டான். இராமனைத் தவிரத் தன்னை எதிர்க்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருக்க முடியாது என்று சிந்தித்தவனாகிக் கண்ணன் காலடிகளில் விழுந்து, "தாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டேன். இராமனே கண்ணனாக அவதரித்துள்ளீர்; என்னை மன்னிக்கவேண்டும்" என்று சாம்பவான் கேட்டுக் கொண்டான். கண்ணன் தான் அவதரித்து வந்திருப்பது உண்மை தான் என்ற செய்தியைச் சொல்லி இராம அவதாரத்தில் அவன் போர் செய்ததனால் ஏற்பட்ட வடுக்களும், புண்களும், காயங்களும் நீங்கும்படி தன் கைகளால் தடவிக் கொடுத்தான். அவன் கண்ணனோடு மோதிக் கொண்ட புதிய நோயும், பழைய வடுக்களும் எல்லாம் நீங்கிச் சுகம் பெற்றான். பின் அக்கரடி அரசன் கண்ணனை வணங்கித் தன் மாளிகைக்கு அழைத்துச்சென்றான். விருந்தினனாக அவனை நன்கு உபசரித்துத் தன் மகள் சாம்பவதியை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். அவனது பக்திக்கும் வேண்டுதலுக்கும் இசைந்து ஜாம்பவதியை மணந்து கொண்டு, அம் மணியை ஏற்றுக்கொண்டு அதைச் சத்திர ஜித்திடம் கொடுத்து ஊர் வந்துசேர்ந்தான். இப்படி இருக்க சத்திரஜித்து தன்னால் கண்ணனுக்கு வீண்பழி ஏற்பட்டதே என்பதற்காக மிகவும் வருந்தினான். தன் மகளை யாருக்குக் கொடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அவளை மணக்க மூன்று பேர் விருப்பப்