பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇81



பின்பு அந்தச் சிங்கத்தின் காலடிகள் ஏற்படுத்திய பதிவுகளைக் கொண்டு பின் தொடர்ந்தனர்; அந்த மதிப்பு மிக்க மணியைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து சென்றனர். அங்கே சிறிது துரத்திலேயே அந்த மிருக அரசனைக் கரடி ஒன்று கொன்றதாகத் தெரிந்தது; அந்தக் கரடி அம்மணியைக் கொண்டு சென்று இருக்கலாம் எனக் கருதிச் சேனைகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுத் தான் ஒருவனாகவேத் தனியே தொடர்ந்து சென்றான் கண்ணன். கரடியின் குகைக்குள் நுழைந்தான். அங்கே அந்தக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த செவிலித்தாய் "சிங்கம் மனிதனைக் கொன்றது; அச்சிங்கத்தை உன் தந்தை கொன்றார்; அது உன்கையில் விளையாடக் கிடைத்தது” என்று அதன் பெருமையைச் சொல்லி "இதை வைத்துக் கொண்டு நீ விளையாடு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்திருந்த கண்ணனைக் கண்ட செவிலித்தாய் அச்சத்தால் கூச்சல் போட்டு ஜாம்பவானை அழைத்தாள். "என்ன? ஏது?" என்று விசாரிக்காமல் மணியைக் கவர வந்த கள்வன் என்று தவறாகக் கருதி கண்ணனோடு முட்டிக்கொண்டு போர் செய்தான். மும்முரமாய் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருபத்து எட்டு நாள்கள் இப்போர் தொடர்ந்தது. வெளியில் இருந்த யாதவர் பன்னிரண்டுநாள் ஆகியும் கண்ணன் குகையிலிருந்து வெளியே வாராததால் அவன் மரித்துவிட்டு இருப்பான் என்று ஊருக்குத் திரும்பி வந்துவிட்டனர். அது கேட்டு அவன் உறவினர் எல்லாரும் இறுதி வழிபாடுகளும்