பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 o ராசீ நரகாசூர வதம் இந்திரன் துவாரகைக்கு வந்து கண்ணனை வணங்கிக் கண்ணன் இதுவரை ஒழித்த அசுரர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களோடு ஒத்த கொடுமை உடையவன் ஒருவன் இருக்கிறான். அவன் மற்றவர்களைவிடத் தேவர் களுக்கு மிகுதியாகத் தொல்லைகள் தருகிறான் என்று விண்ணப்பம் செய்தான். பிரக்குசோதிஷம் என்னும் நகரில் பூமாதேவியின் மகனான நரகாசூரன் என்பவன் இருக்கிறான் என்றும், சசல உயிர்களுக்கும் அவன் ஊறு செய்கின்றான் என்றும், தேவர், கந்தருவர், சித்தர் முதலானவர்களின் கன்னியரை யும், மன்னர்களின் மகளிரான கன்னியரையும் கவர்ந்து கொண்டு தன் மாளிகையில் சிறை வைத்திருக்கிறான் என்றும், எப்பொழுதும் தண்ணிர் தரும் இயல்பினை உடைய வருணனின் குடையையும், மந்திர பருவதத்தின் சிகரமான ரத்தின பர்வதத்தையும் கொண்டு போய்விட்டான் என்றும், தன் தாயான அதிதியின் அமுத கிரணங்கள் ஒளிவிடும் குண்டலங்களையும் கவர்ந்து சென்று விட்டான் என்றும் முறையிட்டான். ஆரம்பத்தில் பூமியைப் பாதாளத்தில் இருந்து தூக்கி வந்தபோது வராக அவதாரமாக வந்த திருமால் ஸ்பரிசம் பட்டுப் பூமிதேவி கரு உயிர்த்துப் பெற்ற மகன் நரகாசூரன் ஆவான். அதனால், அவன் திருமாலின் மகன் என்றும் கூறப்படுகிறது. இந்திரனுக்குத் தக்க விடைதந்து அனுப்பிவிட்டுக் கருடனைக் கண்ணன் அழைப்பித்து அதன் மீது அமர்ந்து கொண்டு நரகன் இருக்கும் இடம் தேடி அணைந்தான்.