துண்டு
109
பாரத்: பேச்சில் கவனம் பிசகி, சீட்டாட்டத்திலே கோட்டைவிட்டு விடுவேன்னு நினைக்கிறயா? அதுதான் இவரிடம்...!
[வெற்றி பெற்றதாகச் சீட்டை காட்டிப் பணத்தைக் குவித்துக் கொள்கிறான்.]
[கதிர்வேல் இருமுகிறான்.]பாரத்: கதிரு! காலையிலே எழுதிக் கொள்ளேன்...போய்த் தூங்கு.
கதிரு: (ஏக்கத்துடன்) தூக்கம் எங்கே வருது?
பாரத்: உன் ரூமுக்குப் போய்த் தூங்கு.
கதிர்: அங்கே மட்டும்...
சீட்டாடுபவன்: அவன் மனசிலேதான் என்னமோ புகுந்துக்கிட்டுக் குடையுதே. தூக்கம் வருமா?
பாரத்: என்னதான் எழுதறே?
கதிர்: ஒரு காவியம்.
சீட்டாடுபவன்: பலே, பலே! காவியமே எழுத ஆரம்பித்துவிட்டார்...இனி உருப்பட்டது போலத்தான்!...
சீட்டா: பாரத்! இந்தக் கதிர்வேலு எப்படி உன்னோடு சேர்ந்தான்?
பாரத்: {அலட்சியமாக) நம்ம ஊர்...ஏழைப்பய...கல்லூரிச் செலவுக்கே கஷ்டம்!
சீட்டா : கையிலேதான் காசு கிடையாதே! பயலுக்குக் கல்லூரிப் படிப்பு எதற்காக?
பாரத்: எங்க அப்பா அதையேதான் கேட்பாரு...இவன் திருதிருன்னு விழிப்பான்...