உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கண்ணாயிரத்தின்

கண்.: (குத்தலாக) என்னைக் கேட்டா? அப்பாவை அல்லவா கேட்கவேணும். அப்பா முன்னே எல்லாம் வருஷா வருஷம் நவராத்திரி உற்சவம் நடத்துவாராமே! அப்போதெல்லாம் அந்த அம்மாவோட கச்சேரிதான் ஏற்பாடு செய்வாராம்...

சிங்.: (சலிப்படைவது போலாகி) சரிடா! போதும், உன்னோட விளக்கம், விவரம், வியாக்யானம்...

கண்.: அந்த அம்மாகூடச் சொன்னாங்க..."உங்க அப்பா உற்சவம்தான் நடத்தி வந்தாரு, பல பேர் செய்தது போல. நீ பரவாயில்லே; ஊருக்கு உபகாரம் செய்றே'ன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க...

சிங்.: படுவா, படுவா!...பேராசைக்காரக்கழுதே!

அன்.:யாருடா தம்பி, அவ?

சிங்.: அட, என்னத்துக்காக அக்கா! நீ வேறே விஷயம் தெரியாம கிளறிக் கிளறிக் கேட்கறே?

[கண்ணாயிரத்தைக் கோபமாகப் பார்த்தபடி]

சரி, இந்தத் தடவையோட நிறுத்திக்கொள்ளு, உன்னோட நாட்டிய ஏற்பாட்டை எல்லாம்...தெரியும் எனக்கு...நானும் நவராத்திரி உற்சவத்துக்குக் கச்சேரிகள் ஏற்பாடு செய்தவன்தான். எனக்கும் தெரியும் எல்லாம்!...ஆமாம்...இதோடு விட்டுத்தொலை...போதும்.

[கண்ணாயிரம் வேகமாக வெளியே செல்கிறான். முகத்திலே கோபக்குறியும், பழைய குப்பையைக்கிளறி, தகப்பனாரை மடக்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சிக் குறியும் கலந்து தெரிகிறது. வேலையாளை வரச்சொல்லி ஜாடை காட்டியபடி அன்னபூரணி அம்மாள் வேறுபக்கம் போகிறாள். சிங்காரவேலர், அறைக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு, முணுமுணுத்தபடி கீழ்க்கூடம் செல்கிறார். கூடத்தில் ஏற்கெனவே காத்துக்