20
கண்ணாயிரத்தின்
சிங்.: அதனாலேதான் நானும் அவன் நாலுகாசு செலவழித்தாலும் பரவாயில்லேன்னு இருக்கறேன்... கேட்டதைத் தட்டாது கொடுக்கிறேன்...குணம் வளரணும் இதோ பாருங்க...பணம் சேரச்சேர ஊருக்கு உபகாரம் செய்யணும்! உமக்கெங்கே அதெல்லாம் பிடிக்கப்போவுது....
வந்த.: அப்படிச் சொல்லிவிடலாமுங்களா...ஏதோ என் சக்தியானுசாரம் நானும் செய்துகிட்டுத்தான் வர்றேன்...இந்த வருஷம் செல்லியம்மன் கோவில் சேவற் காவடி உற்சவச் செலவு பூரா...நான்தானுங்க..
சிங்.: அதைச் செய்வே...'தாயே! என்னை மன்னித்துவிடு. பாவத்தைக் கழுவிவிடு'ன்னு; அதுவும், ஒருவிதமான வியாபாரம்தான்யா...இதோ பாரப்பா...அதிலே எல்லாம் பலன் இல்லே...இதோ நம்ம மகன் ஈடுபட்டு இருக்கிற காரியம் இருக்கு பாரு, அதுதான் சிலாக்கியமானது.
வந்த.: உண்மைதானுங்க! ஏழை-எளியவங்களோட கண்ணைத் திறந்து வைக்கறது புண்ய காரியந்தானுங்க.
சிங்.: அப்படிப்பட்ட காரியத்துக்குக் கொடுங்களேன் ஒரு ஆயிரம்..
வந்த.: (திடுக்கிட்டு) ஒரு ஆயிரமுங்களா...
சிங்.: (கேலிச்சிரிப்புடன்) சொன்ன உடனே முகமே மறிவிட்டதே...சரிய்யா! இந்தா, இதோ பாரு...
உமக்கு இஷ்டமானதைக் கொடும்.
[வந்தவர் தயக்கமடைகிறார். கொண்டு சமாளித்துக் 500 ரூபாய் என்று கையெழுத்துப் போடுகிறார். குறிப்பேட்டை மரியாதையாக சிங்காரவேலரிடம் தருகிறார்.]