இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலகம்
23
வந்து.: காரைக்காலிலே சொந்தக்காரர் வீட்டிலே கல்யாணம்...அங்கு போய்....
சிங்.: நல்ல யோசனை...புறப்படு, புறப்படு!
[வந்தவர் வணக்கம் கூறிவிட்டுச் செல்கிறார். சிங்காரவேலர் வெற்றிப் புன்னகையுடன் வேலையாளைப் பார்த்து...]
டேய்! ஓடிப்போயி, சத்தார் சாயபுவை கையோட அழைச்சிக்கிட்டுவா! அவசரம், முக்கியம்னு சொல்லு ..ஊம்...
[வேலையாள் விரைந்து செல்கிறான்.]
காட்சி—2.
இடம்: கடற்கரைச் சாலை.
கண்.: டிரைவர்! காரை பீச்சு ரோட்டுக்கு விடு...
டிரைவர்: (திகைத்து) பீச் ரோட்டிலேதானுங்க போய்க்கிட்டு இருக்குது வண்டி.
கண்.: (மீண்டும் டிரைவர் முதுகிலே அடித்தபடி) இடியட்? யாரை ஏமாத்தப் பார்க்கறே! இதுதான் பீச் ரோடா?
[உடனிருக்கும் நண்பன் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி]