இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
கண்ணாயிரத்தின்
பிரதர்! நம்மை மடயன் என்றே எண்ணிக்கொண்டான் போல இருக்குது இந்த டிரைவர்!
[டிரைவரை அடித்து] ஓட்டு பீச்சுக்கு! நாடியா காத்துக்கிட்டு இருப்பா.
நண்பர் : நாடியாவை வீட்டிலே விட்டுவிட்டுத்தானே பிரதர் நாம புறப்பட்டோம்...
கண்.: ஆமாம்...நாடியா ஓடியா! ஓடியா, ஓடியா! எப்படி நம்ம பாட்டு! புது ட்யூன்...டிரைவர்! ஓட்ட மாட்டே, பீச்சு பக்கம்?
டிரை.: புதுசா நான் ஒரு பீச்சு போட வேண்டியது தான்!
[கண்ணாயிரம் கண்களை மூடிக்கொள்கிறான். மோட்டார், சிங்காரவேலர் மாளிகை வாயிற் படியில் வந்து நிற்கிறது. கண்ணாயிரத்தை எழுப்பிவிடுகிறான் நண்பன். கண்ணாயிரம் தள்ளாடுகிறான். நண்பன், என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறான். கண்ணாயிரம் தன் கையில் இருக்கும் அலங்காரப் பையை ஆட்டிக்கொண்டு, இடுப்பை வளைத்துக் கொண்டு நடக்கிறான், 'ஓடியா! நாடியா! நாடியா! ஓடியா!' என்று பாடியபடி கண்ணாயிரம் கூச்சலிட்டு வீட்டுக்குள்ளே உள்ளவர்களை எங்கே எழுப்பிவிட்டுவிடுகிறானோ என்ற பயம் நண்பனுக்கு. அங்கு அப்போது மாளிகைப் பணியாட்களில் ஒருவனான கருப்பன் வருகிறான்.]
நண்.: நல்ல வேளை, கருப்பா! கண்ணாயிரத்தை ஜாக்ரதையாக அழைத்துக்கொண்டு போய் படுக்கவை. ஐயா கண்லே படாதபடி... [கருப்பன் கண்ணாயி ரத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மெள்ள மாளிகையின் தோட்டப் பக்கமாக அழைத்துச்செல்கிறான்.தோட்டப் பக்கம் உள்ள படிக்கட்டு வழியாக, யாருக்கும் தெரியாமல்