உலகம்
33
கண்: (சலிப்புடன்) உம்! நான் அஞ்சு வயசு அறியாப் பாலகன், தொலைத்துவிட! உள்ளே மேஜையின் மேலே தான் வைத்திருந்தேன்...
அன்: மேஜையின் மேலே வைத்தா...எங்கே போயிருக்கும்?
அன்: அறை முழுவதும் தேடிப் பார்த்தாச்சு...
சிங்: என்னடா இது! நிஜமாத்தான் சொல்றயா?
அன்: கொழந்தை எதுக்காகப் பொய் சொல்லப் போகுது? நல்லா... கவனமிருக்குதேல்லோ...
சிங்: அறைக்குள்ளே யாரார் போனது...காலையிலே...
அன்: யாரும் இல்லையே..வீராயி போயிருந்தா.....கூட்ட.
சிங்: வீராயி போனாளா?
அன்: அவ ரொம்ப, நல்லவடா தம்பி! திருட்டு—புரட்டு கிடையாது.
சிங்: அட, சும்மா இரு. அவன்தான் சொல்றானே, மேஜை மேலே வைத்ததா...இறக்க முளைச்சிப் பறந்தா போயிடும், கைக்கடியாரம்? வீராயிதான் செய்திருக்கணும், அந்த வேலையை! எங்கே அந்தக் கழுதே?
கண்: வீட்டுக்குப் போயிருப்பா...
சிங்: (பதறி) அய்யய்யோ! ஊரைவிட்டே ஓடிடப் போகுது! வீராயி புருஷன் வேலை வெட்டி இல்லாம கிடக்கிறான். என்ன செய்வா, குடும்பச் செலவுக்கு? திருட்டுக் கை வந்துவிட்டது...
அன்: (சாந்தமாக) இருக்காதுடா தம்பி! ஏழையா இருந்தாலும், அவ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கறவ...
பூ-153-க-2