உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

39

கரு: உயிரின் பேரிலே ஆசை இல்லேன்னா வா, கிட்டே! என் உயிர் போனாலும் சரி... இவளை நீங்க இழுத்துக் கொண்டு போகவிடமாட்டேன்.

[வீராயி. கருப்பன் இருவரையும் போலீஸ் அழைத்துச் செல்கிறது. சிறு கும்பல் கூடுகிறது. சிலர் பின்தொடருகிறார்கள். 'இருக்கும்! இருக்கும்! உண்ட வீட்டுக்கு இரண்டகமா! இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல இருந்தாளே! எந்தப் புத்திலே எந்தப் பாம்போ, யார் கண்டது! இல்லாமெ பொறக்காது—அள்ளாமல் குறையாது. போறாத வேளை! பொல்லாத புத்தி கொடுத்தது! என்னென்ன இனி அம்பலமாகப் போகுதோ! பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்கிற பழமொழி பொய்யா... தடிக்கழுதே! உழைச்சிப் பிழைக்கறதை விட்டுட்டு திருட்டுத் தொழிலையா நடத்தத் துணிஞ்சா? தீட்டிடுவாங்க பாரு. நாலு அஞ்சு வருஷம். ஆமாமாம்! இந்த மாதிரி ஆசாமிகளுக்கு ஈவு இரக்கம் காட்டவே கூடாது. ஆயிரத்துக்குக் குறையாதாம், கடியாரத்தோட விலை?...]

இவ்விதம் ஆளுக்கொருவிதமாகப் பேசிக்கொள்கின்றனர் - கருப்பன், வீராயி நிலையிலே உள்ள எளியோர்கள்! கருப்பன் மீதோ, வீராயி மீதோ குற்றம் இருக்காது என்று கூறத் துணிவும் வரவில்லை; மனமும் எழவில்லை. இல்லாதவன் அகப்பட்டதை எடுத்துக் கொள்வான்! ஏழை திருடுவான்!!—இது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட உண்மை என்று ஏழையர் உலகினரே நம்பிக்கிடந்திடுவது கொடுமையினும் கொடுமை! அவர்களை அவ்விதம் நம்பும்படிச் செய்வதிலே செல்வர் உலகு வெற்றி பெற்றுவிட்டது.

இப்படித்தான் செங்கப்பன் கால் காப்பைத் திருடிவிட்டான்; போடு போடுன்னு போட்ட பிறகுதான் உண்மையை ஒப்புக் கொண்டான். காதோடு சேத்துப் பறித்துக் கொண்டானே கம்மளல, காத்தான்—போன வருஷம்..