உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கண்ணாயிரத்தின்

கண்டுபிடிக்க வெகுநாளாச்சே! பாவம், கொழந்தை, அதன் கழுத்திலே இருந்த செயினை அறுத்துக்கிட்டானேல்லோ...இப்படிப் பல 'கதை'களைப் பேசிப் பேசி, ஆதாரம் தேடிக் கொண்டனர். கருப்பனும் வீராயியும் ஒரு சூழ்நிலை காரணமாக இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டனர் என்று எண்ணக்கூடப் பலருக்கு முடியவில்லை. கருப்பன் பதறுவதையும், வீராயி கதறுவதையும் பாசாங்கு, பசப்பு, நடிப்பு, வேஷம் என்று இப்படித்தான் கருதிக் கொண்டனர். சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டருடைய தைரியம், சுறுசுறுப்பு, கண்டிப்பு ஆகியவற்றைப் பற்றியும் பாராட்டினர்.

['நெருப்பு' என்றான் ஒருவன்; 'நியாயவான்' என்றான் இன்னொருவன்; 'மேல் உத்தியோகம் நிச்சயம்' என்றான் மற்றொருவன்.]


காட்சி—6.

இடம்: சிங்காரவேலர் மாளிகை—கூடம்
இருப்போர்: சிங்காரவேலர், கணக்காளர்.
நிலைமை: சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிப் புன்னகையுடன் வருகிறார். சிங்காரவேலர், சோபாவிலிருந்து எழுந்திருக்காமலேயே, 'வாங்க' என்று மரியாதையாக அழைக்கிறார். சிங்காரவேலரிடம் கடியாரத்தைக் காட்டி, 'இதுதானே?' என்று கேட்கிறார். மகிழ்ச்சியுடன் அதைக் கையிலே வாங்கிப் பார்த்த படி கண்ணாயிரத்தைக் கூப்பிடுகிறார். கண்ணாயிரம் அங்கு வருகிறான். கடியாரத்தைத் தருகிறார்கள்.

கண்: என்னுடையதுதான்...எங்கிருந்தது?

சப்-இ: ஐயா சொன்னபடிதான்...வீராயி வீட்டிலே தான்...

சிங்: அவதான் திருடி இருக்கணும்னு எனக்குத் தெரியுமே! வேறே எப்படிப் போய்விடும்?