உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

41

சப்-இ: ஒரேயடியா...நான் திருடலேன்னு சொன்னா. சத்தியம்கூடச் செய்தா...

சிங்: (அலட்சியமாக) இந்த மாதிரி சத்தியமெல்லாம் அதுகளுக்குச் சக்கரைப் பொங்கலாச்சே...செம்மையாக கொடுத்தாலொழிய அதுகள் நிஜம் பேசாதே.

சப்-இ: கருப்பன், கடியாரத்தை கண்ணாயிரமே தனக்குக் கொடுத்ததாகச் சொன்னான்.

[கண்ணாயிரம் திடுக்கிடுகிறான். நடைபெற்ற சம்பவம் நினைவிற்கு வருகிறது. உண்மையைக் கூறினாலொழிய கருப்பனுக்கும் வீராயிக்கும் கடுமையான தண்டனை கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றுகிறது. 'பாவம்! நம்மாலே அவர்கள் இம்சை படுவதா? நியாயமா?' என்று ஒரு கணம் எண்ணுகிறான்.]

சிங்: (ஒரு சிரிப்புச் சிரித்தபடி) பாருங்களேன், அண்டப் புளுகை.

சப்-இ: (அலங்காரப் பையைக் காட்டி) இந்தப் பையைக்கூட கண்ணாயிரம் கொடுத்தாராம்!

[கண்ணாயிரம் மேலும் திடுக்கிடுகிறான். உண்மையைக் கூறினால் நாடியாவுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகூட அம்பலமாகிவிடும். கேவலம் என்ற எண்ணம் தோன்றுகிறது. உடனே, இரக்க உணர்ச்சியையும் நேர்மையையும் துரத்தி அடிக்கிறது.]

சப்-இ: இது ஒரு நாட்டியக்காரியுடையது.

சிங்: (வக்கீல்போல விளக்கமாக) நாட்டியக்காரியுடைய பைக்கும் என் மகனுக்கும் என்ன சம்பந்தம்? வரவர நானும் பார்க்கறேனுங்க, வயத்துச் சோத்துக்கு வழியத்ததுகளெல்லாம், பழி பாவத்துக்கு அஞ்சாமத்தான் பொய் பேசுதுங்க.