உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

43

[கண்ணாயிரம் சிங்காரவேலரைக் குறும்புத்தனமாகப் பார்த்து சிரிக்கிறான். சப்-இன்ஸ்பெக்டர் வணக்கம் சொல்லி விட்டுச் செல்கிறார். கண்ணாயிரம் மாடிக்குச் செல்கிறான். கவலையும் கோபமும் மாறி மாறி வருகிறது, சிங்காரவேலருக்கு. கணக்கப்பிள்ளையை அருகே அழைத்து எதையோ இரகசியமாகக்கூறி அனுப்புகிறார். அன்னபூரணி அம்மாள் வருகிறார்கள்.]

அன்; என்னடா தம்பி! கிடைச்சுவிட்டதாமே...

சிங்: கிடைக்காமெ...

அன்: போகட்டும்...நமக்குப் பொருள் கிடைச்சுட்டது. போலீசுக்குச் சொல்லி வீராயியை விட்டுவிடச் சொல்லு. ஏழை...பாவம்...அவ உழைச்சித்தான் குடும்பம் நடக்கணும்...

சிங்: (கண்டிப்பான் குரலில்) உனக்கு ஒண்ணும் தெரியாதுக்கா. சும்மா இரு. ஏழையாச்சே, பாவமாச்சேன்னு பார்த்தா...திருட்டும் புரட்டும், கொள்ளையும் கொலையுந்தான் வளரும். அடக்கி வைக்காவிட்டா அதோ கதியா போகும். நம்ம சொத்து போகுது, வருது! அதுக்காகக்கூட இல்லக்கா! ஊரிலே அக்கிரமும் அநியாயமும் நடக்கவிடலாமா? தர்மம் நிலைக்குமா? ஆட்டுக்கும் அளவறிந்துதான் வால் வைத்திருக்காரு ஆண்டவன். ஆனாலும், அடே அப்பா! இந்த மாதிரி ஆசாமிகளுக்கு வரவர எவ்வளவு வாய்த்துடுக்கு, நெஞ்சழுத்தம், எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று பேசுகிற முரட்டுத்தனம் வளர்ந்திருக்குது தெரியுமோ! போறான் பார்டா பொதிமாடு மாதிரின்னு நம்மைபோல ஆளுகளைக் கண்டா...பேசறானுங்க....ஊரை அடிச்சு உலையிலே போட்டுத்தாண்டா சீமான் ஆனான் என்று நம்ம காதிலே விழுற மாதிரியாவே பேசுதுங்க...திருட்டுப் பயல்களை விட்டு வைக்கலாமா?

அன்: ஐயோ பாவம்னு இருக்குது தம்பி!