இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
கண்ணாயிரத்தின்
சிங்: நீதி, நியாயம் இதெல்லாம் நிலைக்கணும்னா சில வேளையிலே மனசைக் கல்லாக்கிக்க வேணும் உனக்குத் தெரியாது, உலகம் போற போக்கு...
[அன்னபூரணி அம்மாள் சோகமாக சென்றுவிடுகிறார்கள். கோட்டும் தலைப்பாகையும் அணிந்த ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் சிரித்த முகத்துடன் வரவேற்கிறார். இருவரும் ஒரு அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வருகின்றனர்.]
வந்தவர்: கோர்ட்டிலே நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த நாட்டியக்காரி விஷயம்...?
சிங்: நான் பார்த்துக் கொள்கிறேன்...
வந்த: தம்பியைக் கூப்பிடுங்க...சில 'பாயிண்ட்' சொல்லிவிட்டுப் போகிறேன்.
[சிங்காரவேலர் ஜாடை காட்ட, பணியாள் ஓடிச்சென்று, கண்ணாயிரத்தை அழைத்து வருகிறான்]
வந்த: உட்கார் தம்பி...
[கண்ணாயிரம் நின்று கொண்டிருக்கக் கண்டு]
சிங்: சரி...சரி! உட்கார்...
[கண்ணாயிரம் உட்காருகிறான்.]
வத்த: தம்பி! அந்தப் பை விஷயம் இருக்கிறதே, அதை அந்தப் பயல் பெரிசு படுத்தப் பார்க்கிறான். நாமும் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
வந்த: இந்தப் பை யாருடையது?
கண்: எனக்குத் தெரியாது.