உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கண்ணாயிரத்தின்

நிலைமை: மூதாட்டி இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறாள். நாடியா, ஒரு பழைய ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள். 'மேக்கப்' அதிகம் இல்லாததால் முகத்திலே சோர்வு படர்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. பளபளப்பு போய் விட்ட புடவை. கலைந்து போயுள்ள தலை. சிறிது கிழிந்து கிடக்கும் விரிப்பின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சுவரிலே, சினிமா நட்சத்திரங்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. நாடியாவின் நடனக்கோலத்தைக் காட்டும் படம் மாட்டப்பட்டிருக்கிறது. சிங்காரவேலரால் அனுப்பப்பட்ட ஆசாமி உள்ளே நுழையக் கண்டு ஆர்மோனியம் வாசிப்பதை நிறுத்திவிட்டு எழுந்திருக்காமலே...

நாடியா: வாங்கண்ணேன்! ஏது அத்தி பூத்ததுபோல்...

அவன்: வரணும் வரணும்னு! ஆனா...வெறுங்கையோட வரப்படாது பாரு, அதனாலே வரவில்லை...

நாடி: அப்படின்னா...இப்ப ஏதோ கச்சேரி கிராக்கியோட வந்திருக்கிறீங்கன்னு அர்த்தம். இல்லையா...


அவன்: ஒரு வேலையாத்தான் வந்திருக்கிறேன்...அதை முடித்துக் கொடுத்தாயானா, ஒரு கச்சேரி என்ன, பல கச்சேரிகளை ஏற்பாடு செய்ய முடியும்...