உலகம்
49
நாடி: என்னண்ணே, பீடிகை பலமாப் போடறிங்க...என்ன வேலை அது?
அவன்: ஒரு ஐந்து நிமிஷ வேலை...கோர்ட்டிலே சாட்சி சொல்லணும்...
நாடி: எந்த டிராமா 'காண்ராக்ட்'டரோட தகராறு?
அவன்: அடடே! இது அந்த விதமான விஷயமல்ல...பெரிய இடத்து விவகாரம்...சிங்காரவேலன்னு ஒரு சீமான்...
நாடி: ஆமாம்! தெரியும் அந்த ஆசாமி சீமான்தான். ஆனா பெரிய மனுஷன்னு சொல்லாதே...நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். எனக்குத் தெரியும்.
அவன்: உனக்குத் தெரியுமா! எப்படி?
நாடி: அது பெரிய கதை அண்ணே! இப்ப அவரு சொல்லித்தான் வந்திருக்கறியா?
அவன்: நீயாகப் போகிற மாதிரி போய்வான்னு சொல்லி என்னை அனுப்பினாரு...நாடியா! காப்பி பலகாரம் வாங்கிவரச் சொல்லேன்'....
நாடி: வேண்டாமண்ணே! காபி வேலையெல்லாம் முடிந்தது. வந்த விவரம் சொல்லு.
அவன்: விவரம் என்னிடம் சொல்லவில்லை. ஏதோ கோர்ட்டிலே கேசாம்...நீ அவருக்காக சாட்சி சொல்ல வேணுமாம்!
நாடி: என்ன கேசுன்னு உனக்குத் தெரியாது அண்ணே. தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டே. நம்மைப் போல ஒரு ஏழையைக் கெடுக்கறதுக்கு என்னை உடந்தையாக இருக்கச் சொல்றாரு. காலையிலே பூக்கடைக்காரர் விவரமா சொன்னாரு அண்ணே! நான் கோர்ட்டுக்குப் போகத்தான் போறேன், சாட்சி சொல்லத்தான் போறேன். ஆனா, உண்மையைச் சொல்லப்போறேன்...இந்த ஆள் விழுங்கிப் பக்கம் பேசமாட்டேன்...