உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

55

எங்கும் குப்பையும் கூளமும் நிரம்பி இருக்கின்றன். நாய்களும், பன்றிகளும் தாராளமாக நடமாடுகின்றன. சிறுவர்கள் அலங்கோலமான நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் சேறு நிரம்பிய பள்ளங்கள். வண்டி இழுப்பவர்களும், விறகு பிளப்பவர்களுமான பாட்டாளிகள் அங்கு காணப்படுகிறார்கள். குடிசைகளுக்கு வெளியே வயோதிகர்கள் சிலர் இருமிக் கொண்டும், சிலர் முடக்கிப் படுத்துக் கொண்டும் இருக்கின்றனர். வாலிபர்கள் சிலர் காட்டுக்கூச்சல் போடுவதும், கலகச் சண்டையிடுவதுமாக உள்ளனர். ஒருபுறத்தில் நாலைந்து பெரிய கற்கள் நடப்பட்டு விபூதி குங்குமம் பூசப்பட்டு வேல்கம்புகள் செருகி வைக்கப்பட்டுள்ளன. பலர் பலவிதமான பேச்சுக்களை ஒரே சமயத்தில் கிளப்புவதால், விளக்கமற்ற ஒரு பேரொலி பரவி நிற்கிறது. ஒருபுறம் பலகாரக் கடை இருக்கிறது; அதற்குப் பக்கத்திலேயே சாணி பிசைந்து விரட்டி தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஈ மொய்த்துக் கிடக்கும் 'மிட்டாய்' விற்கிறான் ஒருவன். சிலர் காலி ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் காட்சியைக் கண்டதால் நாடியாவுக்கு மனவேதனைதான் அதிகமாகிறது. இதுபோன்ற ஒரு குப்பத்திலேதான் அவள் பிறந்தது; வளர்ந்தது. 'குட்டி தளுக்குக்காரி! நடையே நாட்டியமாக இருக்கு! பாரு ஆளை! மயக்கிச் சுருட்டி விரலிலே போட்டுக் கொள்வா மோதிரமாக!' என்று பலர் பலவிதமான பரிகாசப் பேச்சு பேசுவார்கள், சிறுமியாக இருந்தபோது. அங்கிருந்து எங்கெங்கோ சென்று, கடைசியில் நாடியா ஆகி இருக்கிறாள். வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள், அவள் மனத்திரையிலே வேகமாக மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன. ஒரு பெரிய வியப்பு நாடியாவுக்கு! உலகம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. ஆனால் இந்தக்'குப்பங்கள்'