இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
கண்ணாயிரத்தின்
மட்டும், அன்று இருந்ததுபோலவேதான் இன்றும் இருந்து வருகின்றன. ஆட்கள் மாறுகிறார்கள்; ஆனால் 'குப்பம்' என்ற அமைப்பு—அமைப்பா அது? அலங்கோலம் அப்படியே இருந்து வருகிறது. இங்கிருந்து எத்தனை நாடியாக்கள் கிளம்புகிறார்களோ—யார் கண்டார்கள்? செ! கிளம்பும்போது என்னென்ன துன்பக் கனவுகள்! பாதையிலே செல்லச் செல்ல என்னென்ன இடர்கள்! இழிவுகள்! நாடியா, ஏதும் பேசவில்லையே தவிர அவன் மனதிலே ஓராயிரம் எண்ணங்கள் குமுறியபடி இருந்தன. சிங்காரவேலர், அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்; கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். வறுமைப் பிணியிலே சிக்கித் தவிப்பவர்களைக் கண்டால் அவளுக்குக் கண்ணீர் தளும்புகிறது. மனம் அப்படி!!—இது புரிந்தது அவளுக்கு. குப்பம்! அதைக் காண மோட்டார் சவாரி!—விசித்திரம் என்று எண்ணினாள் நாடியா. அவளையும் அறியாமல் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.]
நாலைந்து கல் தொலைவில், சிறு காடடர்ந்த இடத்தை நோக்கி மோட்டார் செல்கிறது. 'நாடியா'வுக்கு இலேசாகத் திகில் பிறக்கிறது. காட்டிலே அடித்துப் போட்டு விட்டுவிடுவார்களோ என்ற பயம்.
தொலைவிலிருந்து ஒசை கேட்கிறது; கல்லைப் பிளப்பது போன்ற ஓசை.
சிறிது நேரத்தில், மோட்டார் ஒரு வெளியில் சென்று நிற்கிறது. கீழே இறங்குகிறார்கள் இருவரும். ஒரு புதிய கோயில் எழும்பிக் கொண்டிருக்கிறது. சிங்காரவேலர் உருக்கமாகப் பேசுகிறார்: "இந்தத் திருப்பணியிலேதானம்மா நான் ஈடுபட்டிருக்கிறேன். நெடுங்காலத்துக்கு முன்பு இது ஒரு கீர்த்தி மிக்க ஸ்தலம். காலக்கொடுமையால் இடிபாடாகி விட்டது இந்த ஆலயம். இதனைப் புதுப்பித்துக் கட்டி முடிக்க வேண்டும். ஆண்டவன் கருணையும் தயவும் இருந்-