உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

57

தால்தான் முடியும் நாடியா! இங்குள்ள மூர்த்தியின் பெயர் அனாதை ரட்சகர் என்பது. பகவான் எடுத்த அவதாரங்கள் பத்து அல்லவா? அந்தப் பத்து அவதாரங்களிலும் செய்து முடிக்காத காரியம், ஏழைகள் படும் துயரைப் போக்காமலிருந்துவிட்டது.

அதற்காகவே பகவான் இங்கு அனாதை ரட்சகர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார் என்பது ஐதீகம். பழைய செப்பேடு, ஓலைச்சுவடி மூலம் இது தெரிகிறது. ஒரு புலவர் குழு தலபுராணம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. வெளியீட்டு விழாவும் விமரிசையாக நடந்திடும்.

நாடியா! இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டுவிட்டால்—இன்று சாஸ்திர முறைப்பட்ட பூஜைகள் நடக்கத் தொடங்கி விட்டால், ஏழைகளுக்கு இன்பமான வாழ்வு கிடைத்திடும்.

நோய் நொடியால் அவதிப்படுபவர்கள் இந்தத் திருக்குளத்தில் ஒன்பது வேளை மூழ்கினால் போதும்.

கண் பார்வை இழந்தவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, அதோ, அந்த மரத்தடியில் ஒரு மேடை அமைக்கப் போகிறோம்; அங்கு படுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரவில், நாக சர்ப்பம் வரும்! கண் இருக்கும் இடத்தைத் தன் நாவல் தீண்டிவிட்டுப் போகும். காலையில் குருடன் விழி பெறுவான். இதுபற்றிய கல்வெட்டே கிடைத்திருக்கிறது.

இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அற்புதம் ஆயிரம் என்று சொல்லலாம்...

இந்தக் காடு ஒரு பெரிய ஜமீன்தாருடையது. மான் வேட்டை ஆடுவதற்காக இதை வைத்துக் கொண்டிருந்தார். இரண்டு இலட்ச ரூபாய் விலைக்குக் கொடுத்திருக்கிறார். பாதிப்பணம் தந்திருக்கிறேன்; எட்டு இலட்சம் விலைக்கு மற்றொரு ஜமீன்தார் கேட்டார்; கொடுக்கவில்லை. கோயில் திருப்பணிக்கு என்றதும் கொடுத்ததைக் கொடு என்றார், புண்ணிய காரியம் என்பதால்!