உலகம்
71
[சிங்காரவேலர் திகைத்து உட்காருகிறார்.அன்னபூரணி ஏதும் விளங்காத நிலையில் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்...கண்ணாயிரம் கோபம் மிகுதியால், சிங்காரவேலர் அருகே சென்று உரத்த குரலில்...]
கண்: என்ன பதில்? ஏன் வாயை மூடிக்கொண்டீர்?
சிங்: குப்பம் அழிந்தது யாரால் என்றுதானே கேட்கிறாய்...(குரூரமான பார்வையுடன்) என்னால் தானடா, என்னால்தான்! கரும்புத் தோட்டம் அழியக்கூடாது என்பதற்காகத்தான்...கரும்புத் தோட்டம் யாருக்காக? உனக்காக... நான் வேட்டையாடுகிறேன்; நீ விருந்து சாப்பிடுகிறாய். நான் ஊரைக் கெடுக்கிறேன் என்கிறாயே, ஆமாடா! ஆம்! நான் ஊரைக் கெடுக்கிறேன். நீ உல்லாசத்தில் புரள்கிறாய். நீயாயம் பேசுகிறாயா, நியாயம்! எப்போது பேசுகிறாய், உன் நியாயத்தை? வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிக்கொண்டு, வகை வகையான இன்பத்தைச் சுவைத்துக்கொண்டு, சீமான் மகன் என்ற அந்தஸ்தில் புரண்டு கொண்டு, தெவிட்டும் அளவு இரத்தத்தைக் குடித்துவிட்டு, இப்போது எனக்கே உபதேசம் செய்கிறாய்; போதனை செய்யும் துணிவு வருகிறது உனக்கு...
கண்: (ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட நிலையில்) அப்பா!
சிங்: (பற்களைக் கடித்தபடி) அப்பா! ஆமடா; ஆம்! அந்த ஒரு சொல்தான் நீ எனக்குத் தந்தது. அதற்காக நான் உனக்கு இந்த மாளிகையைத் தருகிறேன், மாந்தோப்பு தருகிறேன். கடைகள், வீடுகள், நகைகள், மோட்டார்கள், என் உழைப்பு முழுவதும் தருகிறேன். சிறுவிரல் அசைத்ததில்லை நீ; பெருநிதி கிடைக்கிறது உனக்கு! சின்ன மீன்களைத் தின்று தின்று பெரிய மீன் கொழுக்கிறது. அந்தப் பெரிய மீனைத் தின்பதற்கு நீ பிறந்திருக்கிறாய்! நியாயமா