உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கண்ணாயிரத்தின் உலகம்

பேசுகிறாய், நியாயம்—என்னிடம்—நீ—இப்போது! அப்பா! புதிய மாடல் மோட்டார் வேண்டும். இப்போது இருப்பதற்கு என்ன? அது அறுபது மைல் வேகத்துக்குமேல் போகவில்லை அப்பா. ஆமைபோல் நகருகிறது. வேறே ஸ்போர்ட்ஸ் மாடல் வேண்டும். ஆகட்டும் பார்க்கலாம். ஆர்டர் கொடுத்தாகிவிட்டதப்பா! சரி, சரி,...இப்படி அல்லவா...உனக்கு வேண்டிய பொருளை எல்லாம் கேட்டுப் பெறுவாய். முட்டாளே! இது எப்படிக் கிடைத்ததென்று அப்போது யோசித்ததுண்டா? இவ்வளவு சுகபோகம்...ஏன் என்ற எண்ணம் பிறந்ததா? இவ்வளவும் நமக்குத் தருகிறாரே, நாம் அவருக்கு என்ன தருகிறோம் என்ற எண்ணம் பிறந்ததா? அதுதான் தருகிறாயே, ஒருசொல்...அப்பா! அது ஒன்றுதானே நீ தருவது? அவ்வளவுதானே உன்னால் முடிந்தது?

[அவ்வளவுதான் அவரால் பேச முடிந்தது. மயக்கம் அவரைத் தாக்கிற்று. அன்னபூரணி அம்மாள், "டாக்டர்! டாக்டர்!" என்று அலறினார்கள். வேலையாட்கள் பதறினார்கள். கண்ணாயிரம் கண்களிலே நீர்கொப்பளித்துக்கொண்டு வந்தது.]

அவ்வளவுதான் அவனால் முடிந்தது...?