94
ரொட்டித்
சுப்பு: கருவேப்பிலைக் கொத்து மாதிரி நமக்கு இருப்பது, ஒண்ணே ஒண்ணுங்க—கெட்டப் பேச்சுப் பேசாதிங்க...
ராம்: என்னை அழியச் சொல்றாண்டி, என்னை.
அம்பாரி மீது ஏறிக்கொண்டதால் யானையைக் கொடுமைப்படுத்தலாம் என்று எண்ணாதே!...
யானைக்குக் கோபம் பிறந்தால், அது உன்னைத் தன் காலின்கீழ் போட்டு, மிதித்து உன்னைக் கூழாக்கிவிடும்.
என்னை! பெத்தவனை! இவனை இவ்வளவு செல்வத்திலே புரளச் செய்கிற என்னை! சுப்புத்தாயி! யானை காலிலே போட்டு மிதிச்சி...
காட்சி—11.
இடம்: விழாக்கூடம்.
இருப்: பாரத்பூஷண், விழா காண்போர்.
நிலைமை: ஒரு முதியவர் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் பலர் களைத்துப் போயிருப்பது தெரிகிறது.
விழாத் தலைவர், கைகடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறார். பலர் புகழ்ந்து பேசுவதைக் கேட்டதால், கூச்சம் அடைந்த நிலையில் இருக்கிறான் பாரத்பூஷண்.முதியவர்: பகவானுடைய கிருபையாலே பாரத்பூஷண் தீர்க்காயுசாக இருந்து பழைய காலத்துச் சங்கப் புலவர்களின் பெருமையைக் காட்டிலும் அதிகமான பெருமையைப் பெற்று விளங்கவேண்டும்.