உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

95

[பாரத் பூஷண் அவரைக் கும்பிடுகிறான். முதியவர் உட்கார்ந்து விடுகிறார்.]
[விழாத் தலைவர், எழுந்திருக்கிறார் பேச. ஒரு மாது, கூட்டத்தின் ஒருபுறம் இருந்து, ஒலி பெருக்கி நோக்கி வரக்கண்டு விழாத்தலைவர் உட்கார்ந்து விடுகிறார்.]

மாது: இவ்வளவு பெரியவர் எல்லாம் பேசிய இடத்திலே பேசுவது என்றால், எனக்குப் பயம்தான். ஆனால் செல்வன் பாரத்பூஷண் அஞ்சாதே! அஞ்சாதே! என்று அழுத்தந்திருத்தமாக எழுதியதைப் படித்த பிறகு அஞ்சலாமா? நான் அஞ்சப் போவதில்லை. இவ்வளவு பேர் பேசினார்கள்...பல விஷயங்களை...ஆனால் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்தே விட்டார்கள். எனக்குக் கோபம்...வருத்தம்! 'ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என்ற எனக் கேட்ட தாய்!'

தெய்வப் புலவர் திருவள்ளுவர் வாக்கு பொய்யாகுமா? திருவள்ளுவருக்குப் பொய்யா மொழியார் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா! அப்படிப்பட்ட தாயைப் பெருமைப்படுத்திப் பேசவில்லையே என்பதுதான் எனக்கு வருத்தம்.

[தமிழாசிரியர் எழுந்திருக்க முயலுகிறார். பக்கத்தில் இருப்பவர், அவரை உட்கார வைத்து விடுகிறார்.]

நாம் அனைவரும் இங்குகூடி, கொண்டாடி, பாராட்டி, வாழ்த்தி, மகிழ்ந்தோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி, பெருமை, யாருக்கு இருக்கும்? பாரத்பூஷணனைப் பெற்றெடுத்த உத்தமிக்கு.

[பலத்த கை தட்டல்]

அந்தப் பெருமாட்டிக்குத்தான் எல்லாப் பெருமையும். பாரத் பூஷணன் நாடு போற்றிடும் ஏடு தந்தார். அந்தத்