உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ரொட்டித்

தாயோ பாரதனையே நமக்குத் தந்தார். அந்த அன்னையை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். கண்களிலே ஆனந்தம் தாண்டவமாடும், அந்த அன்னைக்கு.

[கைதட்டி மகிழ்கிறார்கள்.]


காட்சி—12.

இடம்: மாளிகை உட்புறக்கூடம்.

இருப்: ராம்லால், சுப்புத்தாய்.

நிலைமை: ராம்லால், சட்டையைக் கழற்றி ஒரு புறம் வீசிவிட்டு, பனியனோடு காணப்படுகிறார். ரொட்டித் துண்டு புத்தகம் ஒரு புறம் எறியப்பட்டுக் கிடக்கிறது. ஒரு நாற்காலி கீழே தள்ளப்பட்டுக் கிடக்கிறது. ராம்லால், கடிதங்களைப் படிப்பதும், கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிவதும், ஏதேதோ முணுமுணுத்துக் கொள்வதுமாக இருக்கிறார். கவலை தோய்ந்த முகத்துடன் சுப்புத்தாய் இதைக் காண்கிறாள். மேலும் என்ன கோபமோ என்று எண்ணிக் கலக்கமடைகிறாள். எழுந்து உட்பக்கம் செல்கிறாள். அதைக் கவனிக்காமல் ராம்லால் கடிதங்களைப் படித்தபடி இருக்கிறார். டெலிபோன் மணி அடிக்கிறது. ராம்லால் வெறுப்புடன் டெலிபோனைப் பார்க்கிறார்.

ராம்லால்: (உரத்த குரலில்) வேறே வேலை வெட்டி கிடையாதா? ஓயாம டெலிபோன்...செச் செச் செச் சே!

[வேகமாக எழுந்து சென்று டெலிபோனை எடுத்துக் கீழே வைத்துவிட்டு வந்து உட்காருகிறார்.