சித் தலைவர் தீண்ட காலமாக காதி ஆடையைத் தான் அணித்திருந்தார். கதரை அவர் அணிந் திருந்த காலத்திலெல்லாம் இப்பொழுது அவர் கூறிய விஷயத்தைப் பற்றி சிந்திக்கவில்லையா என்று கேட்டார்! காயிதே மில்லத்: அந்த காலத்தில் நான் கதராடை மட்டும் அணிந்திருக்கவில்லை. ஒத்து ழையாமை இயக்கத்தில் சேர்ந்திருந்தேன்(சிரிப்பு) ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு படிப்பை யும் விட்டவன் நான். என்னுடைய நண்பர் அப்துல் மஜீத் இது பற்றி இங்கே முன்பு குறிப்பிட்டுள் ளார். கதர் ஆடை, ஓர் அடையாளச் சின்னம் என்று அவர் கூறினார். கொஞ்ச காலத்திற்கு அந்த அடையாள சின்னத்தை நாங்களும் ஏற்றி ருந்தோம். ஜமீன்தாரி ஒழிப்பு : ஜமீன்தாரி முறையை ஒழிக்கப் போவதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆளுங்கட்சியினர் விரும்பினால் அதை செய்யலாம். ஜமீன் தாரி முறையில் பல துஷ்பிரயோகங்களும், பல ஜமீன்தாரி முறை இடைஞ்சல்களும் உள்ளன. யை ஒழித்த பிறகு அதற்குரிய நஷ்டஈடு கொடுக் கப் போவதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இந்த சிந்தனை சரியானது தான? என்பது எனக்குப் புலப்படவில்லை. ஜமீன்தார்களை வெளியேற்றுவ தில் அரசுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. ஜமீன்தார்களிடமிருந்து பல நபர்கள் அன்றைய நிலவர விலையில் நிலங்களை கிரையம் பெற்றிருக் கிறார்கள். பலர் ஒத்திக்கு நிலம் பெற்றிருக்கிறார் கள். இவர்கள் அனைவரும் தங்களது நலன்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். ஜமீன்தார்களுக்காக நான் பரிந்து பேசுகிறேன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். ஜமீன்தாரி முறை ஒழிப்பால் ஒரு பெரும் குழப்பமே ஏற்பட உள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மது விலக்கு: அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் அதிகமாக மது அருந்துகிறர்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்பட வில்லை என்றும் கூறப்பட்டது. அங்கெல்லாம் மது விலக்குக் கொள்கை தோற்று விட்டது என்றும் -சொன்னார்கள். 267 அமெரிக்காவில் மது விலக்குக் கொள்கையை அரை மனதோடு கொண்டு வந்தார்கள். மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த அவர்கள் சீரிய முறையில் பாடுபடவில்லை. மது விலக்கு 'வெற்றி பெறுவதை அவர்கள் உள்ளூர விரும்ப வில்லை. மதுவிலக்குக் கொள்கை தோற்றதற்கு அதுதான் காரணமாகும். மற்றொரு உண்மையை நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். மது அருந்துவதை மேமை நாடுகளில் ஒரு சமூகக் கேடு என்று யாரும் நினைப் பதில்லை. ஜீவாதார உரிமையாகவும், அடிப்படை வாழ்க்கை தேவையாகவும் மதுவை அவர்கள் கருதுகிறார்கள். மதுவிலக்கு என்பதை, தமது உரிமையைப் பறிப்பதாகவும். வாழ்க்கை வசதியை குறைப்பதாகவும் அவர்கள் நினைக் கினார்கள். ஆகலேதான் மதுவிலக்கை அங்குள் ளோர் எதிர்க்கிறார்கள். ஆனால், நமது நாட்டில் நிலை முற்றிலும் வேறுபட்டதாகும். இங்கு மது அருந்துபவர்கள் கூட தாங்கன் குடிப்பதை பெருமையாகக் கருதவில்லை. உடல்நலனுக்காக குடிப்பதாக நம்நாட்டு மக்கள் சொல்லிக் கொள் கிறார்கள். இதுதான் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய உண்மையாகும். ஆகவேதான், நமது நாட்டில் மதுவிலக்கு வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவதற்குரிய காரியங்களை செய்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். . மதுவிலக்கால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும் என்பது ஒரு சிலரின் வாதமா கும். வருமான இழப்பு ஏற்படும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்; ஆனால் எந்த ஒரு அரசராங்கமும் மக்களின் தீயபழக்கங்களையும், சமுதாயக் கேடுகளையும் தனது வருமானத்தைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தக்கூடாது பதை நினைவுபடுத்துகிறேன். எவ்வளவு வருமா னம்வந்தாலும் அல்லது எவ்வளவு வருமானத்தை இழந்தாலும் மக்ககளின் நவ்வாழ்வுக்கு குறுக்கே நிற்கின்ற தீயபழக்கத்தை ஒழித்துக் கட்டுவ தற்கு, எந்த அரசாங்கமும் தயங்கக் கூடாது என் பதே எனது வாதமாகும். என்
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/283
Appearance