உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 (ஆலயப் பிரவேசம் குறித்து மதருஸ் சட்டசபையில் 1-4-1947 அன்று விவாதம் நடைபெற்ற பொழுது காயிதே மில்லத் கூறியதாவது:] ஆலயங்களின் உள்ளே செல்லதாலும். அங்கே பிரார்த்தளை புரிவதாலும் மனித ஆன்மா புனிதமடைகிறது என்று தான் நம்புகிறேன் என்றே. அல்லது நம்ப வேண்டும் என்று கருதி யோ இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. இது விஷயத்தை எல்லாம் மக்கள் தீர்ப்புக்கு விட்டு விட வேண்டும் என்ற அடிப்படையில் நான் ஆதரிக்கிறேன். ஆலயங்களுக்குள் நுழைந்து பிரார்த்தனை புரிவதால் தங்கள் ஆன்மா புனித மடைகிறது என்று கருதுகிறார்கள் என்றால் அதற்கு தடை ஏன் இருக்க வேண்டும்? இம் மாகாண மக்களில் ஒரு சாரார் யாதொரு தடையுமின்றி அவர்கனது விருப்பப்படி ஆலயங் களுக்குள் அனுமதிக்கப்படும் போது, இந்த நாட் டில் உள்ள மற்ற இந்துக்களைப் போல் தாழ்த்தப் பட்டவர்களும் (ஜெர்மன் தேசத்து ஜனத்தொகை அளவுள்ள அவர்களும்) சம அந்தஸ்து பெறுவ தற்கு இம் மசோதா வாய்ப்பு ஏற்படுத்துகின்றது. இந்த சுதந்திரம் அந்தத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற காரணத்தினால் இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன். உறுப்பினரின் அறியாமை இந்த மசோதாவை முன்மொழித்த கனம் உறுப்பினர் தனது பேச்சு வாக்கில், இஸ்லாமிய மார்க்கத்திலும் உருவ அடையாளங்கள் உண்டு என்று குறிப்பிட்டார். உண்மைக்குப் புறம்பான சில செய்திகளை அவர் இங்கே தெரிவித்தார். முஸ்லிம்கள் திருக்குர்ஆனை வணங்குகிறார்கள் என்றார். சில இடங்களில் முஸ்லிம்கள் பிரார்த் தனை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார் கள் என்றார். இந் கூற்றுக்கள் உண்மை அல்ல. ஒரு முஸ்லிம், தான் விரும்புகின்ற எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம். முஸ்லிம் கள் திருக்குர்ஆனை வணங்குவதில்லை. திருக்குர்ஆன் வேத நூலாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட 268 நூலாகும். சீக்கியர்கள் அவர்களின் வேதநூலை, கிரந்தசாகிபை வணங்குவதைப் போல், போல், முஸ் லிம்கள் திருக்குர்ஆனுக்கு வணக்கம் செலுத்துவ தில்லை சீக்கியர்களின் பழக்க வழக்கத்தைப் போல் தான் முஸ்லிம்களின் பழக்க வழக்கமும் இருக்கு மென்று கருதிக் கொண்டே கனம் உறுப்பினர் அவ்வாறு கூறியிருக்கிறர் என்று நினைக்கிறேன். முஸ்லிம்கள் மேற்கு நோக்கித் தொழுவதைத் தான் உருவ அடையாளம் என்று கனம் உறுப் பினர் கருதிக் கொண்டுள்ளார் என்று எண்ணூ கிறேன். எதுவானாலும், இறைவளை வணங்க விரும்பு வோர் மத்தியில் ஒற்றுமை ஓங்க வேண்டும்; ஒழுக் கம் தழைக்க வேண்டும்; உலகளாவிய மனப்பாங்கு வளர வேண்டும் என்பதே முக்கியமானதாகும். வைணவர்களில் சில பகுதியினரிடத்தில் சில பழக்கங்கள் உண்டு - எல்லா வைணவர்களும் அப் படிப்பட்டவர்கள் என்று நான் கூறவில்லை. பொதுலிருந்து நடக்கும் போது அவர்கள் அமர் கின்றமுறை விசித்திரமானது. ஒருவாமுகத்தை ஒருவர் பார்க்காத வகையில் பொது விருந்தில் அமர்கின்றனர், இத்தகைய முறையில் 'முஸ்லிம் களாகிய நாங்கன் தொழுகை நடத்துவதில்லை. ஒரே விதமாக - கூட்டாக - ஐக்கிய உணர்வோடு தொழுவதற்குத்தான் நாங்கள் எல்லோரும் மேற்கு நோக்குகிறேம். அப்படிச் செய்ய எங்கள் மார்க்கம் எங்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறது. இத்தகைய ஒருமைப் பாட்டிற்காக மேற்கு நோக் குவது உருவ அடையாளமாகாது. இதுவே உருவ அடையானம் என்றால் இந்த நாட்டில் உள்ள மக்களை ஆயிரக் கணக்கில் பிரித்து வைத்து, ஒருவருக்கொருவர் மோத விட் டுக் கொள்ளும் வகையில் ஆயிரக் கணக்கான உருவ அடையாளங்களை ஏற்படுத்துவதில் பொருள் ஏதுமிருக்கிறதா?