லைலத்துல் கத்ரு இரவில் கேட்கப்பட்ட துஆ திருச்சி கே. எஸ். அப்துல் வஹாப் ஜானி சாகிப், Ex. M.L.C. 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளு மன்றத் தொடரில் கலந்து கொள்வதற்காக டில்லிக்கு விமானத்தில் சென்ற காயிதே மில்லத் அவர்கள் தலைநகர் போய்ச் சேர்ந்த இரவே உடல் நலம் குன்றி ரத்த வாந்தி எடுத்தார்கள் என்ற தகவல் அறிந்ததும் ஜனாப் மியாகானு டனும் டாக்டர் யூ. முஹம்மதுடனும் நான் புது டில்லிக்கு விமானம் மூலம் விரைந்து சென்றேன். புதுடில்லி விலிங்டன் மருத்துவ மனையில் (இந்த சர்க்கார் ஆஸ்பத்திரியின் அன்றைய பெயர்) தீவிர சிகிச்சை பெற்று வந்த தலைவர் அவர்களை நாங்கள் மூவரும் விமான நிலையத்தி லிருந்து இறங்கியதும் நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்த்தோம். அப்போது அவர்கள் மயக்கமுற்ற நிலையில் இருந்தார்கள். முறையான சிகிச்சைகள் டாக்டர்களால் அளிக்கப்பட்டு வந்தது. அது வரை நடந்த சிகிச்சைகளை டாக்டர் முஹம்மது கேட்டுத் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் நாங்கள் ஆஸ்பத்திரியிலேயே அமர்ந்திருந்தோம். திடீரென காயிதே மில்லத் அவர்கள் கண் விழித்துப் பார்த்தார்கள். மியா கான் அருகில் போய் நின்றார். கண்களைத் திறந்து பார்த்ததும் ஆளை அடையாளம் தெரிந்து கொண்டார்கள். 'மியான் வந்துட்டாயா?!’ என்று மெல்லிய குரலில் வாயசைத்தார்கள். நான் போய் பக்கத்தில் நின்றேன். 'என்ன ஜானி பாயா' என்று சொல்லி என்னையும் புரிந்து கொண்டார்கள். டாக்டர் முஹம்மது பக்கத்தில் நின்றதைப் பார்த்து ‘டாக்டர் சாப்! நீங்களும் வந்துட்டீங்களா?' என்றார்கள். நாங்கள் மூவரும் பக்கத்திலேயே சிறிது நேரம் நின்றோம். கொஞ்ச 'நேரத்தில் தலைவரவர்களின் கண்கள் மூடிக் கொண் டன. மீண்டும் மயக்க நிலை. நாங்களும் வெகு நேரம் வரை ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு தங்கும் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு வரலாம் எனப் போய் விட்டோம். காலையில் போய்ப் பார்த்தால் ஒருவருமே எதிர்பாராத அதிசயம் விலிங்டன் ஆஸ்பத்திரியில் நடந்து கொண்டிருந்தது. காலையில் தலைவ -ரவர்கள் கண்விழித்ததும் எழுந்து படுக்கையில் 67 அமர்ந்து கொண்டார்களாம். நர்ஸ்களிடம் நன்றாகப் பேசி இருக்கிறார்கள். டீ கேட்டு வாங்கி குடித்திருக்கிறார்கள். இரவில் இருந்த நிலை மைக்கும் காலையில் இருந்த நிலைமைக்கும் பெருத்த வித்தியாசம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆஸ்பத்திரி பெரிய டாக்டர் கரோலிக்கு பெரிய ஆச்சரியமாகப் போய்விட்டது. 'எனக்கே ஒன்றும் விளங்கவில்லை' என்று அந்த டாக்டர் எங்களிடம் பின்னர் கூறினார். டீ குடித்த சிறிது நேரத்தில் பசிக்கிறது என்று காயிதே மில்லத் அவர்கள் கூறி இருக் கிறார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று வினவி யதற்கு இடியாப்பம் வேண்டுமென்று கூறி இருக் கிறார்கள். அது தருவிக்கப்பட்டு கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை சாப்பிட்டார்கள். பின்னர் நன்றாக எழுந்து அமர்ந்து கொண்டு நர்ஸ்களிடம் ஜோக் அடித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் மூவரும் காலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்று தலைவர் அவர்களைப் பார்த்தால் நன்கு சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். எங்க ளுக்குப் பெரிய வியப்பாகப் போய்விட்டது. டாக்டர்களுக்கே புரியவில்லை. எங்களுக்கு என்ன தெரிய முடியும்? என்னுடைய அபிப்ராயத்தில் காயிதேமில்லத் அவர்களின் உடல் நிலையில் திடீர் முன்னேற்றம் ஏற்படக் காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதுவே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தலைவரவர்களுக்கு சுகக் குறைவு ஏற்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்ததுமே இந்திய முஸ்லிம் சமுதாயமே சஞ்சலமடைந்து இருந்தது. அன்றிரவு ‘லைலத்துல் கத்ரு' இரவாகும். மு.ஸ் லிம்கள் அனைவருமே உருக்கமாக இறைவனிடம் காயிதே மில்லத்திற்காக துஆக் கேட்டார்கள். இறைவன் அதை ஏற்றுக் கொண்டான் போலும். ஒரு நொடியில் தலைவர் அவர்களுடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. எனக்குத் தெரிந்த உண்மை இதுதான்.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/76
Appearance