ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சம்பளம் பெற்றவர் ஹாஜி. எம். ஜமால் முஹம்மது சாகிப் தலைவர் : முஸ்லிம் அனாதை நிலையம் 1920-25ம் ஆண்டுகளில் நாட்டு விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடந்து கொண் டிருந்தது. அத்துடன் கிலாபத் இயக்க போராட்டமும் இணைந்திருந்தது. மதறாஸ் ஹாஜி ஜமால் முஹம்மது சாகிப் அவர்களும், காயிதே மில்லத் அவர்களும் சுதந்திரப் போராட் டங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் இவ்விருவருடன் நேரடியாகத் தொடர்பு உண்டு என்பது அக்கால அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களுக்கு காந்திஜீயுடன் நேரடித் தொடர்பு உண்டு. அடிக்கடி வார்தா நகர் சென்று பல நாட்கள் அங்கு தங்கி காந்திஜீ யுடன் உரையாடல்கள் நடத்துவதும் உண்டு. காங்கிரஸ் தலைவர்களின் நடமாட்டங் களையும், அவர்களது ஆலோசனைகளையும் முன் கூட்டித் தெரிந்து கொள்ள, அன்றைய வெள்ளைக் கார அரசாங்கம் ஒரு சூழ்ச்சியில் இறங்கியது. திருச்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அச்சமயம் சென்னை மாகாண போலீஸ் இலாக்கா உளவுத் துறையில் உயர் பதவியில் இருந்தார். அவரைப் பயன் படுத்தி ஹாஜி ஜமால் முஹம்மது சாகிபி னுடையவும், காயிதே மில்லத்தினுடையவும் நட மாட்டங்களை அறிந்து கொள்வது என போலீஸ் உளவுத்துறை திட்டமிட்டு செயலில் இறங்கியது. மதறாஸ் தம்பு செட்டித் தெரு 16 ம் இல் லத்தில் ஜமால் மொகிதீன் அன்கோ என்ற பெயரில் பிரபலமான தோல் கம்பெனி செயல் பட்டுக் கொண்டிருந்தது. ஹாஜி ஜமால் முஹம் மது சாகிப் இக் கம்பெனியில் பிரதான பங்காளி, காயிதே மில்லத் அவர்களும் ஒரு பார்ட்னர். ஒரு நாள் அந்த போலீஸ் அதிகாரி இக் கம் பெனிக்கு வந்தார். ஏற்கனவே கம்பெனி முதலாளிமார்களை அவருக்கு நன்கு தெரியும். போலீஸ் துறையிலிருந்து தாம் விலகி விட்ட தாகவும், அரசாங்கத்தின் போக்குத் தமக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம் என்றும் கூறினார். வேலையில்லாதிருப்பதால் குடும்பத்தை நடத்துவ தற்கு சிரமப்படுவதாகவும் ஏதாவது வேலை கிடைத்தால் அதைத் தாம் பார்ப்பதற்குச் சித்த மாக இருப்பதாகவும் தெரிவித்தார். 68 அந்த நபர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கூறியதை உண்மை என நம்பி ஜமால்" முஹம்மது சாகிப் மிகவும் வருத்தப்பட்டார்கள், வேண்டுமானால் தங்களுக்குப் பொருத்தமான வேலை அமையும் வரையில், எங்கள் கம்பெனியி லேயே பணியாற்றலாம், என்று ஜமால் முஹம்மது சாகிப் தாராள மனதுடன் கூறி னார்கள். அதைத் தானே தானே அந்த ஆசாமியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இருந்தது. அந்த போலீஸ் அதிகாரி இப்பணியை ஒப்புக்கொண்டு விட்டார். மறு நாளிலிருந்து ஜமால் மொகிதீன் கம் பெனியில் காயிதே மில்லத்திற்குப் பக்கத்திலேயே அவருக்கு இருப்பிடம் ஒதுக்கப்பட்டு சில பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. தினசரி ஆபீஸ் வருவதும் வேலைகளைச் செய்வதுமாக இருந்தார். காயிதே மில்லத் அவர்களுடனும் மற்றும் கம்பெனி பங்காளிகளுடனும், சமூக, அரசியல் விஷயங்கள் குறித்தும் அவ்வப்பொழுது பேசிக் கொள்ளவும் செய்தார். நாள் செல்லச் செல்ல அந்த நபரைப் பற்றி காயிதே மில்லத்திற்கு மனத்தில் ஒரு சந்தேகம் எழலாயிற்று. அவருடைய நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கலானார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஜமால் முஹம்மது சாகிபுக்கு மிடையில் நடைபெறும் பேச்சுக்கள், அவர்களது கடிதப் போக்குவரத்துக்கள், எந்தெந்த ஊர்களுக்கு. அவர்கள் போகிறார்கள். யாரை யாரை சந்திக் கிறார்கள் என்பன போன்ற விஷயங்களை அறிவதி லேயே அந்த ஆசாமி கவனமாக இருந்தார்! அந்த குறிக்கோளுடனேயே அவரது நடமாட்டங் களும் பேச்சு வார்த்தைகளும் இருந்தன என்பதை காயிதே மில்லத் புரிந்து கொண்டார்கள்; உஷா ராகிக் கொண்டார்கள். இது குறித்து ஜமால் முஹம்மது சாகிபுடனும் தனியாகக் கலந்தாலோ சனை நடத்தவும் செய்தார்கள். அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் இயக்கத்தினரும் கிலாபத் இயக்கத் தின னரும் ஈடுபடும் சமாச்சாரங்கள் ஒன்று கூட இந்த ஆசாமி மூலம் போலீஸ் உளவுத் துறைக்குக்.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/77
Appearance