டைக்கவில்லை, என்ன நோக்கத்திற்காக அந்த ஆசாமி இந்தக் கம்பெனியில் வேலையில் சேர்ந் தாரோ அது கை கூடவில்லை. காயிதே மில்லத் அவர்கள் உஷாராகி இருந்து கொண்டதே இதற்குக் காரணம். கிட்டத் தட்ட ஓராண்டு காலம் இக் கம் பெனியில் பணிபுரிய அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்தது. நோக்கம் கை கூடாத தால் மீண்டும் போலீஸ் இலாக்காவிற்கே வந்து விடும்படி அவர் பணிக்கப்பட்டார். தமக்கு சம்பளம் கட்டவில்லை, எனவே வேலையிலிருந்து விலகிக் கொள்வதாக அந்த ஆசாமி ஒரு நாள் கூறினார். அப்பொழுது காயிதே மில்லத் அவர்கள் “நாசூக்காக” என்ன? இரண்டு இடங்களில் சம்பளம் வாங்கியுமா உங்களுக்குச் செலவுக்குப் போதவில்லை" என்று ஆச்சரியத்துடன் னார்கள். அவரின் முகம் செத்து விட்டது. று கூறி ஒரு சில மாதங்களிலேயே அவர் மீண்டும் போலீஸ் உயர்பதவியில் அமர்த்தப்பட்டார். பின் காலங்களில் திருவிதாங்கூர் திருவிதாங்கூர் சமஸ்தானத் திலும் சி.பி. இராமசாமி அய்யர் திவானாக இருந்த காலத்தில் அவர் மிகப் பெரிய போலீஸ் பதவியில் இருந்து செயல் பட்டார். . பாவனைகளி ஒருவருடைய நடை உடை விருந்தும் பேச்சுக்களில் இருந்தும் அவரை சரியாக எடை போடுவதில் காயிதே மில்லத் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். ஒரு உயர்தர போலீஸ் அதிகாரியினால் கூட, தமது அந்தரங்கத் தை அவர்களிடமிருந்து மறைத்து வைக்க முடிய வில்லை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக் காட்டாகும். நான் பேசவாரம்பித்த கதை ஆடுதுறை ஜமால் முஹையத்தீன் பாப்பா தலைவர் : கிழக்குத் தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் காயிதே மில்லத் அவர்கள் எனக்கு மச்சான். எங்களுடைய இரண்டாவது அக்காவை அவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள். எக்மூர் திவோ னியா பங்களாவில்தான் நான் பிறந்தேன். சுமார் ஏழெட்டு வயது வரை மச்சான் வீட்டில்தான் வளர்ந்தேன். நான் சிறுவனாக இருக்கும்போது எனக்கு பேச்சு அவ்வளவாக வராது- எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் சரளமாகப் பேச என்னால் இயலவில்லை. எனது பெற்றோர்களுக்கு அது மிகுந்த வருத்தமாக இருந்தது. ஏதோ மந்திரித்து ஒரு தாயத்தை என் கழுத்தில் கட்டி யிருந்தார்கள். அச்சமயம் நான் காயிதேமில்லத் வீட்டில்தான் தங்கியிருந்தேன். வைத்தியமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் பிள்ளைகளுடன் மச்சான் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது மாடிப் படியில் இருந்து வழுக்கி கீழே விழுந்து விட்டேன். படிகளில் உருண்டு, உருண்டு அடித்தளத்திற்கே சேர்ந்து விட்டேன். அப்படி உருண்டு வந்து புரண்டதில் எனது கழுத்தில் கட்டப்பட்டிருந்த வெள்ளி தாயத்து - (அது ஒரு அடைக்கப்பட்டிருந்தது) - எனது நாக்கை நன்றாக அறுத்து விட்டது. நாக்கிலிருந்து ரத்தம் ஒழுக லாயிற்று. கீழே விழுந்த அதிர்ச்சியினாலும் நாக்கு காயம்பட்ட வலியினாலும் நான் ஒரேயடி யாகக் கூச்சல் போட்டு விட்டேன். சப்தமிட்டு அழுதேன். சப்தமிட்டு எதையோ சொல்லிக் கொண்டு நான் அழுவதைக் கண்டதும் வீட்டிலுள்ளவர் களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. வாய் பேசாதவன் எதையோ சொல்லிக் கொண்டு அழுகிறானே என்று என்னைக்கட்டி அணைத்துக் கொண்டார்கள். நாக்கு அறுந்து ரத்தம் வருவதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. நான் பேசவாரம்பித்து விட்டது பெரியவர்களுக்கெல்லாம் ஒரே கொண் டாட்டமாகப் போய்விட்டது. இந்த அதிசயம் காயிதே மில்லத் அவர்கள் வீட்டில் வைத்துதான் நிகழ்ந்தது. எனது நாக்கு நரம்பில் ஏதோ பிடிப்பு இருந் திருக்கிறது. அதனால்தான் என்னால் பேச முடிய வில்லை. தாயத்து நாக்கில் குத்தி விட்டதும் அந்த பிடிப்பு அறுந்து விட்டது. பேசும் ஆற்றல் வந்து விட்டது. டாக்டர்கள் இவ்வாறு விளக்கம் அளித்ததாக வீட்டிலுள்ளவர்கள் சொல்லிக் கொள்வார்கள். கூட்டிற்குள் 69
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/78
Appearance