1950-ம் ஆண்டி ல் எனது தந்தையார் இறந்து விட்டார்கள். நாங்களெல்லாம் அப் போது மைனர்கள். மச்சான் அவர்களும் கும்ப கோணம் கந்தசாமி மூப்பனாரும் எங்களுக்கு கார்டியன்களாக இருந்து மேற்பார்த்து வந் தார்கள். விவசாயத்தில் மச்சான் அவர்களுக்கு ஆர்வம் மிக அதிகம். எக்மூர் பங்களாவிலும் சரி, குரோம்பேட்டை வீட்டிலும் சரி நிறைய செடி, கொடிகளை வைத்து வளர்ப்பார்கள். வேப்பமரம் என்றால் அவர்களுக்கு மிகப் பிரியம். குரோம் பேட்டையில் வீடு கட்டும்பொழுது அவர்கள் அருமையாக வளர்த்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டவேண்டும் என்ற நிலை வந்த பொழுது அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. வீட்டை சில அடி தூரம் தள்ளித்தான் கட்ட வேண்டிவந்தது. மரத்தை மட்டுமல்ல, அதன் சில கிளைகளையும் வெட்டக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். தஞ்சை மாவட்டத்திலுள்ளவர்களுக்கு நெல் விவசாயத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. ஒரே மகசூலை நம்பி இருக்கக் கூடாது. பல தரப் பட்ட விளை பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யோசனை சொன்னவர் களே காயிதே மில்லத் தான். அது மட்டுமல்ல ஆடுதுறையில் சில மேடான இடங்களில் தென்னங் கன்றுகளை அவர்கள் வற்புறுத்தல் பேரில்தான் நாங்கள் வைத்தோம். சில வருடங்களில் அது காய்ப்புக்கு வந்து பலன் தர ஆரம்பித்த பின்பு தான் நெல்லை விட இதில் வருமானம் அதிகம் கிடைக்கிறதென்பதை புரிந்து கொண்டோம். பின்னர் எங்களைப் பார்த்துதான் தஞ்சை மாவட் டத்தின் மேற்குப் பகுதியில் பல பண்ணையார் களும் தென்னை சாகுபடியில் இறங்கினார்கள். ம் பணமா? ஒற்றுமையா? 'பணம் இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விடலாம் என்று இறுமாப்புக்கொள்வது தவறு. ஒற்றுமைதான் மிக முக்கியம், ஒற்றுமை போய்விட்டால் ஆட்சிமட்டுமல்ல, மரியாதையும், உரிமைகளும் கூடப் பறிபோய் விடும். உர மூட்டைகள் இருக்கின்றன. அவற்றை தக்க தருணத்தில் வயலில் போட்டு பயிர்களை வளர்த்து வந்தால் நல்ல மகசூல் கிடைக்கும். அவ்வாறு செய்யாமல் உரமூட்டைகளை வெறுமனே அறையில் அடுக்கி வைத்திருந்தால், அதனால் பயனுண்டா? இதே போலத்தான் பணமும். உரத்தை உபயோகப்படுத்துகிற மாதிரி பயன்படுத்தினால்தான் பணத்திற்கு பலனுண்டு. பணம் மட்டும் இருந்தால் வெற்றி கிட்டி விடாது. வெற்றிக்கு அடிப்படை தூய்மை, உறுதி. நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பத்தில் பணக்காரர்களும், செல்வாக்கு உள்ளவர்களும் மூர்க்கமாக எதிர்த்தனர். ஆனால் இறுதியில் அரேபியா முழுவதற்கும் மட்டுமல்ல உலகத்திற்கு பூராவிற்கும் அவர்கள் லௌகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சேர்ந்து ஏக தலைவர் ஆனார்கள். பணத்தினால் மட்டுமா இப்பெரிய சாதனையைச் சாதிக்க முடிந்தது? கலீபா உமரே பாரூக் அவர்கள் பத்து ஆண்டு காலத்தில் பனிரெண்டாயிரம் குறுநில மன்னர்களைப் பணிய வைத்தார்கள். பணத்தினால் மட்டுமா இது நடந்தது? இந்த உமர் (ரலி ) அவர்களைப் பின்பற்றும்படி காந்திஜி தனது ஹரிஜன் பத்திரிக்கையில் எழுதினார். எழுபத்திரண்டு ஒட்டுகளை உடைய சட்டையை அணிந்திருந்த கலீபா உமர் (ரலி) அவர்கள் அந்தக் காலத்தில் அதுவரை உலகமே கண்டிராத ஆதிபத்தியத்திற்கு அதிபரானார்கள். அவர்களது இதயம் மிருது வானது. எளியவர்களுக்கு அது மென்மையானது: எதிரிகளுக்கு அது எஃகு போன்றது. இங்குள்ள மக்கள் ஏழைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஏழ்மை கேவலமானதல்ல. எளியவர்களாகிய நீங்கள்தான் உலகம் வியக்கும் வெற்றியைத் தேடித்தந்தீர்கள். எதிரிகளின் மினுமினுப்பும் படாடோபமும் உங்கள் முன் நிற்கவில்லை. கொள்கை பலத்தினால் ஜெயசீலர் ஆனீர்கள். உலகம் எந்தக் காலத்திலும் பகைமையினால் வெற்றி கொள்ளப்பட்டதில்லை. எதிரி களுக்கும் நாம் நல்ல முன்மாதிரியாக இருப்போமாக!" அல்ஹாஜ் காயிதே மில்லத் பிறந்தநாள் விழாப் பெருமலர் 1974. ஆசிரியர்கள் : P. N. I. அபுதாலிப்; M. A. அக்பர் ☑ 70
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/79
Appearance