உங்களுக்குரிய சன்மானங்கள் அல்லாஹ்விடத்தில் காத்திருக்கின்றன! தமிழ் நாடு மாநில செயற்குழு உறுப்பினர்களில் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் 1952-ம் ஆண்டு அமலுக்கு வந்ததி லிருந்து 1962-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட சபைக்கு மலபார் நீங்கலாக முஸ்லிம் லீக் காரர் கள் யாரும் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக் கப்படவில்லை. 1962-ம் ஆண்டுதான் முதன் முதலாக முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம். எல். சி. பதவி கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு எம்.பி. அல்லது எம். எல். சி. என்று சிற்சில கட்டங்களில் கிடைத்து வந்தது. அபூர்வமாகக் கிடைக்கும் இவ்வாய்ப்புக் களுக்கு கட்சி சார்பாகத் தாங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பழுத்த முஸ்லிம் லீக் ஊழியர்கள் எதிர்பார்ப்பதில் வியப்பொன்றுமில்லை. சம்பத் தப்பட்ட இடங்களுக்குத் தாங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பலரும் காயிதே மில்லத் அவர்களிடம் கோரிக்கைகள் வைத்த துண்டு. நண்பர்களிடம் சொல்லி தலைவரவர் களிடம் சிபாரிசு செய்யச் சொன்னதும் உண்டு. உண்மையிலேயே தகுதி வாய்ந்த பலரும் அப்பதவி களுக்கு ஆசைப்பட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக முஸ்லிம் வீசிற்கு ஒதுக்கப் பட்டிருப்பதோ ஓர்இடம் அல்லது இரண்டு இடங்களாக இருந்தன. அந்த இடத்தைக் கேட்டுப் பெற நினைப்பதோ பத்து பதினைந்து மூத்த தலைவர்கள்; கியூ வரிசையில் அவர்கள் நின்றார்கள். இதில் பலருக்கும் போதிய தகுதிகள் இருந்தன என்றாலும் ஒருவருக்குத்தானே அந்த இடத்தை அளிக்க முடியும்? சமயங்களில் அந்த இடத்திற்காகக் கட்சியினால் தேர்ந்தெடுக்க பட்டவர் மற்றவர்களை விட சில அம்சங்களில் தகுதி குறைந்தவராக இருக்கவும் செய்யலாம். செயற்குழுக் கூட்டங்களில் இப்பேச்சு எழும் சமயங்களில் தலைவரவர்கள் பலதடவைகள் சில உதாரணங்களைக் கூறிக் காட்டுவார்கள், பொறுமையாக இருக்கும்படியும் அவர்களது சேவைக்கான கூலியை இறைவனால்தான் கொடுக்க முடியுமே தவிர மனிதர்களால் முழுமை யாகக் கொடுத்து விட என்றும் இயலாது சொல்லிக் காட்டுவார்கள். பதவி ஆசை ஏற்பட்ட பிறகு இந்த சமாதானம் காதில் எங்கே ஏறப் போகிறது? எல்லாம் வயதில் மூத்தவரும் ஒரு மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவருமான ஒருவர் தாம் எதிர்பார்த்த எம். எல். சி. பதவி தமக்குள் கிட்டவில்லை என்றதும், செயற்குழுக் கூட்டத்தில் மிகவும் மன வருத்தத்துடன் தமக்கு மிகவும் வயதாகி விட்டதாகவும், மாவட்ட பொறுப்பு களிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாகவும் வேஒெருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படியாகவும் தலைவரவர்களைக் கேட்டுக் கொண் டார். காயிதே மில்லத் அவர்களுக்கு மிகவும் போய்விட்டது. கஷ்டமாகப் அச் செயற்குழு வில் இறுதியாக அவர்கள் பேசும்போது கூறி னார்கள். "இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபட்டவர் களில் காந்திஜியைப் போல யாரும் இருக்க முடியாது. முதன்மையான தேசப் பிதா என அவர் எல்லோராலும் மரியாதையாக அழைக்கப் படுகின்றார். நாட்டு நாட்டு விடுதலைக்காக நான்தான் பாடுபட்டேன். எனவே இந்திய ராணுவத்தின் பிரதான தளபதியாக நானேதான் இருப்பேன் என்றோ அல்லது நாட்டின் பிரதம மந்திரியாக நானே வரவேண்டும் என்றோ அவர் கோரிக்கை வைக்கவில்லை. இந்நாட்டின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அவரது சேவை சற்றுக் குறைவானது என்னும் அர்த்தமல்ல. காமராஜர் இந்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். நல்ல பல தொண்டுகளைச் செய்தார். நான் முதலமைச்சராக இருப்பதினால் இங்குள்ள பெரிய ஆஸ்பத்திரியிலும் நான்தான் தலைமை டாக்டராக இருக்கவேண்டும் என்று காமராஜர் சொல்லவில்லை. 71 சில அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகளைக் கொடுத்திருக்கின்றன். அந்தந்த திறமைகளுக் கேற்ப நாம் செயலாற்ற வேண்டும். சில சமயங்களில் சந்தர்ப்பம் கிடைக்கலாம். சமயங்களில் சந்தர்ப்பங்கள் கிடைக்காமலும் போகலாம். அதற்காக யாரையும் குறைத்து அல்லது தரம் தாழ்த்தி மதிப்பீட முடியாது அது கூடாது. யார் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட் டாலும் ஒவ்வொருவருக்கும். அவரவர் கூலி அல்லாஹ்விடத்தில் நிச்சயம் உண்டு. அதை நம்புகிற கூட்டம் நம்முடையது. எனவே பதவி கலை எதிர்பார்த்து அது கிட்டாது போனவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்விட மிருந்து உங்களது சன்மானங்கள்- உங்களுக்காக காத்திருக்கின்றன." வாயி இவ்வார்த்தைகள் தலைவரவர்கள் லிருந்து வெளி வந்ததும் எல்லோருடைய மனக் குறைகளும் பனிப்போல அகன்று விட்டன.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/80
Appearance