உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரக்கணக்கான பிரதிகள்தான் விற்பனையாகின்றன. இதன் காரணமாக மாதந்தோறும் ஏற்படுகின்ற இழப்பை எப்படி ஈடு செய்வது என்று திகைத்து அதை ஈடு செய்வதற்கு வேறு வழி உண்டா என்று பார்த்தபோது, இன்னொரு ஏடு தொடங்கி, அதை ஒரு பொதுவான ஏடாக எல்லாச் செய்திகளும் வருகின்ற ஏடாகத் தொடங்கி அது வியாபார ரீதியாக வெற்றி பெற்றால் அதிலே வருகிற ஆதாயத்தைக் கொண்டு முரசொலிக்கு வருகின்ற இழப்பை ஈடு செய்து, இதையும் காப்பாற்றலாம் என்கின்ற எண்ணத்தோடு ஒரு ஏடு தொடங்கப்பட்டது. "தமிழன்" என்று பெயர் வைப்பதே தவறா? அந்த ஏட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது 'தமிழன்' என்று பெயர் வைக்கலாம் என்று நான் சொன்னேன். ஆனால் தம்பி முரசொலி மாறன் அந்த 'தமிழன்' என்கின்ற பெயரை விற்பனையாளர்களெல்லாம் விரும்புகிறார்களா, வாசகர்கள் விரும்புகிறார்களா, குறிப்பாக நம்முடைய தி.மு.கழக நண்பர்கள் விரும்புகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க ஒவ்வொரு ஊருக்கும் ஆட்களை அனுப்பி ஒரு ஆய்வு நடத்தியபோது 'தமிழன்' என்று பெயர் வைத்தால் வியாபாரம் சரியாக இருக்காது. அதை ஏதோ ஒரு கட்சிப் பத்திரிகை என்று எண்ணிவிடுவார்கள். எனவே ஒரு பொதுவான பெயராக வையுங்கள் என்ற யோசனையை பெரும்பாலோர் சொன்னார்கள். தமிழன் என்ற பெயர் நான்கு பேர் காதிலாவது ஒலித்துக் கொண்டிருக்கட்டும்! நாளெல்லாம் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்று அன்று முதல் இன்று வரையிலே உரக்கக் கூவி வருகின்ற 9