உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல்..... "சரித்திரம் படித்தது போதும் சரித்திரம் செய்வோம் வாருங்கள்" லண்டன் மாநகரின் மீதே குண்டுகள் வீழ்ந்து பிரித்தானியப் பேரரசே சோதனையின் விளிம்பில் நின்றபோது தன் நாட்டு மக்களை எழுந்து நிற்கச் செய்ய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகங்கள்தான் இவை 'தடா' என்ற கொடும் சட்டத்தின் கீழ் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு; கழகத்தின் தலைவரே கைது செய்யப்படுவார்; தி.மு.கழகமே தடை செய்யப்படும் என்ற அச்சமும் பரபரப்பும் தமிழகத்தைச் சூழ்ந்திருந்த நேரத்தில்தான் தி.மு.கழகம் தனது ஒன்பதாவது உள்கட்சித் தேர்தலை: கிளைக் கழகம் தொடங்கி தலைமைக் கழகம் வரை நடத்தி முடித்து சரித்திரம் செய்திருக்கிறது. ஜனநாயக தலைவர்களாய்த் தொடங்கிய பலர் சில ஆண்டுகளிலே சர்வாதிகாரிகளாய் மாறியதுதான் உலக வரலாறு. கால் நூற்றாண்டாய் இந்தக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவர் டாக்டர் கலைஞரவர்கள் இன்னமும் கடைக்கோடித் தொண்டனின் அங்கீகாரத்தைப் பெறும் உள்கட்சித் தேர்தல்களை ஊக்குவிப்பவரும், காப்பவரும், மதிப்பளிப்பவரும் 1