பக்கம்:கண் திறக்குமா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கண் திறக்குமா?


சிவகுமாரனைப் போன்ற ‘காதலர்’ தங்களுடைய திருவிளையாடல்களுக்கு அவற்றைச் சாட்சிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்!”

‘ஆமாம், அந்த நாய்களை உனக்கு எப்படித் தெரிந்தது?”

‘வழியில் நான் அவர்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய நேர்ந்தது; அதன் மூலம் தெரிந்து கொண்டேன்.’

‘இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” ‘அவர்கள் எங்கே இருந்தால் என்ன? முதலில் அவளை உங்கள் மகனுக்குக் கல்யாணம் செய்து வைப்பதாகச் சொல்லுங்கள். பிறகு நான் அவர்களை இங்கே அழைத்து வருகிறேன்!’

“அவள் சிவகுமாரனுக்கு மாலையிட வேண்டுமானால் முதலில் என் உடம்பில் இருக்கும் உயிர் என்னை விட்டுப் போக வேண்டும்!”

‘உங்களைப் போலவேதான் உங்களுடைய மகனும் சொல்கிறானோ? - அந்தக் கிராதகனை இங்கே கொஞ்சம் வரச் சொல்லுங்களேன், கேட்டுப் பார்ப்போம்?”

‘அவனுக்கென்ன, உனக்குப் பிடித்திருப்பது போல் பைத்தியமா பிடித்திருக்கிறது?’ அந்த நாயின் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை’ என்றுதான் அவன் அன்றே சொல்லிவிட்டானே!’

‘'அட பாவி, உனக்காகவா அவள் அவ்வளவு தூரம் பரிந்து பேசுகிறாள்?’


பரிந்து பேசாவிட்டால் பணக்கார மாப்பிள்ளை எப்படிக் கிடைப்பான்? - உனக்கு உலகம் தெரியாது, அப்பா! - இப்படிப்பட்டவர்களிடம் இரக்கமே காட்டக் கூடாது - போகட்டும்; அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குக் கொஞ்சம் சொல்லேன்? - பாவத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/115&oldid=1379044" இலிருந்து மீள்விக்கப்பட்டது