பக்கம்:கண் திறக்குமா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



121


கொள்ள வேண்டுமென்று ஆசையாயிருந்தது. ஆனால் இதில் ஒரு சங்கடம் - அவர் ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி!’

‘சரிதான்; அவர் ஆண்ஜாதி, நீங்கள் பெண் ஜாதியாக்கும்?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை - நான் சூத்திரச்சி, அவர் பிராமணர். இந்த வேறுபாட்டால் பெற்றோருக்குத் தெரியாமல் கோவிலுக்குச் சென்று, நாங்கள் முறைப்படிக் கல்யாணம் செய்துகொண்டோம். ஆரம்பத்தில் வாழ்க்கை என்னமோ ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிலும் சிவகுமாரனைப் போல இவள் பிறந்ததும் அவர் என்னைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாய்த்தான் எங்களைக் காத்து வந்தார். கடைசியில் பாழும் எமன் இன்னுங் கொஞ்ச நாட்கள் அவரை எங்களிடம் விட்டு வைக்காமல் கொண்டு போய்விட்டான்!” என்று சொல்லி, அவள் கண்களைக் கசக்கிக் கொண்டாள்.

‘சரி, அப்புறம் என்ன நடந்தது?”

‘இரண்டு பெண்டாட்டிக்காரர் அல்லவா? - இறந்த பிறகு அவருடைய சொத்தைப் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.”

“ம்?’”

‘இருவரும் கோர்ட்டுக்குப் போனோம்; வழக்கு வளர்ந்தது - தீர்ப்பு என்ன தெரியுமா? - பிராமணப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்ட சூத்திரன் இறந்து விட்டால் அவனுடைய சொத்தில் அந்தப் பெண்ணுக்குப்பங்கு பெற உரிமையுண்டாம்; சூத்திரப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்ட பிராமணன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்தில் பங்கு பெற அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லையாம்!"

‘'ஒஹோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/124&oldid=1379053" இலிருந்து மீள்விக்கப்பட்டது