பக்கம்:கண் திறக்குமா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கண் திறக்குமா?

"வந்தனம்; இந்த விஷயத்தில் உங்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்ள நான் தயாராயில்லை!"

"அப்படியானால் உம்முடைய பத்திரிகையை முழுக்க முழுக்க ஏழைகளின் ஆதரவைக் கொண்டே நடத்த முடியும் என்று நீர் நம்புகிறீரா?"

"ஆமாம்; அப்படி நம்புவதில் குற்றம் என்ன இருக்கிறது?"

"நன்றாய்ச் சொன்னீர்கள்; அப்படி நம்புவதிலா குற்றம் இல்லை? - நீர் சொல்லும் ஏழைகளுக்கு உண்ண உண வில்லை; உடுக்கக் கந்தையில்லை. இருக்க வீடில்லை; படுக்கப் பாயில்லை. இந்த நிலையில் இருந்து கொண்டு அவர்கள் உம்முடைய பத்திரிகையை எப்படி ஆதரிப்பதாம்? வேண்டுமானால் நீர் உம்முடைய காசைப் போட்டுப் பத்திரிகையை அச்சடித்து இனாமாக அவர்களுக்கு விநியோகம் செய்யலாம்; அப்படிச் செய்தாலும் ஏதாவது பலன் உண்டா என்றால் அதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குமேல் எழுதப் படிக்கத் தெரியாது; அப்படியே தெரிந்தாலும் உம்முடைய பத்திரிகையைப் படிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்காது. பேசாமல் நான் சொல்வதைக் கேளும்: உம்முடைய லட்சியத்தை ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு நடுத்தர வகுப்பினருக்காகப் பத்திரிகை நடத்தும். அதிலும் ஆண்களுக்காக நடத்தாதீர்; பெண்களுக்காக நடத்தும். மாதத்தில் மூன்று நாட்கள் வெளியே உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், அவர்கள் உம்முடைய பத்திரிகையை அவசியம் படிப்பார்கள், அவர்களுக்காக அவர்கள் வாழ்க்கையில் இல்லாத காதல் கதைகளை நிறையப் போடும். ஆயிரந்தடவை வந்தவையானாலும் பாதகமில்லை: ஆயிரத்தோராவது தடவையாக நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/169&oldid=1379243" இலிருந்து மீள்விக்கப்பட்டது