பக்கம்:கண் திறக்குமா.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கண் திறக்குமா?


சர்க்கார் உத்தியோகமோ எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. சுதந்திர சர்க்காரில் வேண்டுமானால் உத்தியோகம் பார்க்கலாம். அடிமை சர்க்காரில் உத்தியோகம் பார்க்கலாமா? அப்படிப் பார்ப்பதாயிருந்தால் நானும் பரந்தாமனாரைப்போல் கொஞ்ச காலம் வக்கீலாகவே இருந்து, போதுமான பணம் சேர்ந்த பிறகு அந்தத் தொழிலை விட்டிருக்கலாமே?

சரி, தனிப்பட்டவர்களுடைய கம்பெனிகளில் ஏதாவது வேலை பார்க்கலாமென்றால் அதற்கும் ஒரு தடை இருந்தது. காந்தியத்தின் அடிப்படையில் எந்தக் கம்பெனியாவது இயங்க முடியுமா? அப்படி இயங்கினால் அதனுடைய முதலாளி மகாத்மாவைப்போல் அரை நிர்வாணப் பக்கிரியாகத்தானே ஆக வேண்டியிருக்கும்? அத்தகைய வாழ்வை யார் விரும்புவார்கள்? விரும்பாதவர்களிடம் நான் எப்படி வேலை பார்ப்பது?

சொந்த வியாபாரம் ஏதாவது செய்யலாமென்றாலோ சத்தியத்திற்கும் அதற்கும் ரொம்ப ரொம்ப தூரம்; இல்லையா?

இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்த பிறகு, பிரைவேட் வாத்தியாராக இருந்து காலந் தள்ளுவதுதான் தேவலை என்று எனக்குத் தோன்றிற்று. அதற்குள் காங்கிரஸ் ஏதாவது போராட்டம் ஆரம்பித்தால் சர்க்கார் என்னை விருந்தாளியாக ஏற்று உபசரிப்பார்களல்லவா?

இந்த யோசனை பரந்தாமனாருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த விதமான வரும்படியும் இல்லாமலே அவர் என்னை ஆதரிக்கத் தயாராயிருந்தாரென்றாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. அதே சமயத்தில் வயிற்றுக் கவலையைத் தீர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி நண்பர்களை நாடுவதும் எனக்கு என்னவோபோல் இருந்தது. சாந்தினியைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/201&oldid=1379172" இலிருந்து மீள்விக்கப்பட்டது