பக்கம்:கண் திறக்குமா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. “சாந்தினி நீயா!”

ழந்த ஒளியை என் கண்கள் மீண்டும் பெற்றபோது நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். என் உடல் முழுவதும் ஒரே ‘பாண்டேஜ்’ மயமாக இருந்தது; சுற்றுமுற்றும் பார்த்தேன். என்னுடைய கோலத்தில் இன்னும் பலர் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் வேதனையின் அளவை விதம் விதமாக முனகி வெளியிட்டுக் கொண்டிருந்தனர். “ஐயய்யோ!” என்று அலறுவான் ஒருவன்; ‘அம்மம்மா’ என்று துடிப்பான் ஒருவன்; ‘அப்பப்பா!’ என்று பதைப்பான் ஒருவன்; ‘ஆ, ஊ’ என்று அப்படியும் இப்படியுமாகப் புரண்டு புரண்டு படுத்துத் தவிப்பான் ஒருவன், வாய்விட்டு ஏதும் முனகாமல், “ஊம்... ஊம்” என்று ‘ஊங்’ கொட்டுவதோடு நிற்பவர்களும் அங்கே இல்லாமற் போகவில்லை. ஆனால் அவர்களுக்கெல்லாம் அவ்வளவாக வேதனையில்லை என்று சொல்லிவிட முடியாது, இயற்கையான சங்கோசம் அதற்குக் காரணமாயிருந்தாலும் இருக்கலாமல்லவா?

அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த நர்சுகளோ, எங்கள் வேதனையைக் கொஞ்சமாவது உணரவில்லை. அவர்களுக்கு இயற்கையிலேயே இதயமில்லையோ - இல்லை, அதைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டுத்தான் வேலைக்கு வருகிறார்களோ - தெரியாது. அவர்கள் பாட்டுக்கு ஆடி அசைந்து நடப்பதும், அடிக்கடி தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரிப்பதுமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தனர். இடையிடையே எங்கள் முனகல் சத்தம் அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/28&oldid=1379418" இலிருந்து மீள்விக்கப்பட்டது