உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரும்பாரம்

19

தைக் காட்டுகிறது, என்று எண்ணினான். அவனை, மன்னர்மட்டுமல்ல, நாடே வரவேற்றது! அவனுடைய புகழ் அரண்மனையில் மட்டுமல்ல, ஸ்பெயினிலே ஸ்பெயினிலே மட்டுமல்ல; வேறு பல நாடுகளிலும் பரவிற்று.

“நமக்குக் கிடைத்திருக்கவேண்டிய, பாக்கியம். மன்றாடினான் எவ்வளவோ நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொன்னான். மன்னா! என்னை நம்புங்கள்! மரக்கலமும் கொஞ்சம் பொருளும் கொடுத்து ஆதரியுங்கள். நான், உமக்கு புதிய புதிய மண்டலங்களைக் கண்டுபிடித்துக் காணிக்கையாக்குகிறேன். கட்டுக்கதையென்று எண்ணிவிடாதீர்! கிடைத்ததைச் சுருட்டிக்கொள்ள, ஏதோ வாயிலே வந்ததைப் பேசுகிறேன் என்று எண்ணாதீர்! என் ஆராச்சியின் முடிவை, உமக்குத் தெரிவிக்கிறேன். என் மனதிலே, பலப்பல நாட்களாக மெள்ள மெள்ள வளர்ந்து, உருவாகியிருக்கும். திட்டத்தைக் கூறுகிறேன். தயக்கம் வேண்டாம். என் தகுதி பற்றியோ திட்டத்தின் தகுதிபற்றியோ சந்தேகிக்கவேண்டாம்—என்று, பலப் பல சொன்னான். நான் நம்ப மறுத்தேன்—யாரோ ஓர் எத்தன் என்று ஏளனம் செய்தேன்—உன் ‘மனோராஜ்யத்தை’; நீயே ஆண்டு அனுபவித்துக்கொள்— எனக்கென்று ராஜ்யமும் இருக்கிறது, யாரை நம்புவது, எதைச்செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறது என்று ஆணவத்தோடு பேசி அனுப்பிவிட்டேன். இப்போது எனக்கு வெட்கமாகவே இருக்கிறது, அந்த வீரன் விருதுபெற்றுத் திரும்பினான். பெர்டினாண்டு பேருபசாரம் செய்தானாம். பொன்னாடை விரித்தனராம். கொலம்பஸ், அந்த வரவேற்பின்போது, என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/22&oldid=1771191" இலிருந்து மீள்விக்கப்பட்டது