உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கதம்பம்

எண்ணி ஏளனம்கூடச் செய்திருப்பான். அவன் கண்டுபிடித்த புதிய ராஜ்யம், ஸ்பெயினுக்குச் செல்வத்தையும் செல்வாக்கையும் தரும்; வியாபாரத்திலேயும் இலாபம் கிடைக்கும், அவ்வளவு தொலைவிலே, ஒரு ராஜ்யத்தை அமைப்பது என்றால், எவ்வளவு இரத்தம் கொட்ட வேண்டும் படை வீரர்கள்! ஸ்பெயினுக்கு, ஒரு இலட்சிய வீரனின் தயவால், ராஜ்யம் புதிதாகக் கிடைத்திருக்கிறது, அங்கே, என்னென்ன செல்வம் கிடைக்குமோ யாரறிவார்கள்! வெற்றிபெற்ற கொலம்பசை இலாபமடைந்த பெர்டினாண்டு, மேலும் உற்சாகப்படுத்தி, மேலும், பல புதிய இடங்களைக் கண்டுபிடித்து, ஸ்பெயினுக்குத் தரும்படி கூறுவான். ஸ்பானியக் கொடி பறக்கிறது. அட்லாண்டிக் கடலுக்கு அப்புறமுள்ள தேசத்தில்! என் கொடி பறந்திருக்கவேண்டிய இடத்தில்! ஏமாளி நான், கொலம்பஸ் வந்த போது, விரட்டினேன். பெர்டினாண்டு புத்தியுள்ளவன் கொலம்பசைக் கொண்டு, கண்காணா இடத்திலேயும், தன் கொடி பறக்கச் செய்து கொண்டான்” என்று லே மன்னர்கள் எண்ணி ஏங்கினர்.

கொலம்பசின் கண்களுக்கு, குதூகலத்தோடு வரவேற்கும் மக்கள்—கைலாகு கொடுத்து கௌரவித்த அரசனும் அரசியும், பொன்னாடை, விழா, இவை மட்டுமல்ல—இவைகளைக் கண்டு கொண்டிருக்கும்போதே, மெல்லிய ஓர் திசையில், எங்கு நோக்கினாலும் ஒரே கடல் மயம் ! பெரும் புயல்! தாக்கவரும் திமிங்கிலம்! தன்னை எதிர்க்கும் கலத்தாட்கள்! காட்டு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/23&oldid=1771181" இலிருந்து மீள்விக்கப்பட்டது