உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரும்பாரம்

21

மிராண்டிக் கூட்டம்!—ஆகிய காட்சிகளும் தோன்றின ஒருகணம், அந்தக் காட்சி மட்டுமல்ல, பலரிடம், காகிதச் சுருனையைப் பிரித்து, நேர்க்கோடுகள், வளைவுகள் ஆகிவற்றைக் காட்டிக் காட்டி விளக்கம் கூறுவது, அதனை அலட்சியமாகக் கேட்டுவிட்டு, ஆணவத்தோடு சிரித்துவிட்டு, எடுத்துச்செல் இந்த ஏடுகளை என்று உத்தரவிட்டு விட்டுச் செல்லும் சீமான்கள், மன்னர்கள், கையைக் காட்டி, போகிறான் பார் பித்தன்! புதிய பிரபஞ்சத்தைச் சிருஷ்டிக்கப் போகிறானாம்!! என்று ஏளனம் செய்வது போன்ற காட்சிகளும் தெரிந்தன—ஆனால் மறுகணம் அவை மறைந்தன—எதிரே, ஸ்பெயின் நாட்டரசரும் அரசியும் புன்னகையுடன் வீற்றிருக்கிறார்கள்—மேலே பொன்னாடை — சூழ நிற்கிறார்கள் வரவேற்பளிப்போர்—விருந்து நடைபெறுகிறது—இவைகள் தெரிந்தன. கொலம்பசின் மனதிலே மகிழ்ச்சி பொங்கிற்று—கண்களிலே, நீர்த்துளிகள் தோன்றித் தவழ்ந்தன.

கொலம்பஸ் வாழ்க! அலைகடலில் அஞ்சாது சென்று புதிய உலகைக் கண்ட வீராதி வீரன் கொலம்பஸ் வாழ்க!—மக்களின் முழக்கம்—பல ஆண்டுகள் பட்ட கஷ்டத்துக்குப் பரிசு! ஆனந்த அறுவடை!!

கனவு காண்கிறான்! என்றே, நண்பர்கள் கூட எண்ணினர். கொலம்பசின் திட்டம், யாருக்குமே முதலில் நம்பிக்கையூட்டுவதாகத்தான் இராது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி, பெரியதோர் பிரதேசம் இருக்கிறது—திசை தெரியாததாலும் போதுமான

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/24&oldid=1771882" இலிருந்து மீள்விக்கப்பட்டது