உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

கதம்பம்

ஆராய்ச்சி இல்லாததாலும் அந்தப் பிரதேசங்கள இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை. யாரும் சென்றுபார்க்காததாலேயே, அங்கு ஏதும் இல்லை என்று முடிவு செய்துவிட்டனர். அவர்கள் முடிவு தவறு! நான், அந்தத் தவரை உலகுக்கு விளக்கப் போகிறேன். அந்தப் புதிய பிரதேசத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று கொலம்பஸ், ஆர்வத்துடன் பேசினான். பெரியவர்கள் கண் சிமிட்டினர்—பெண்கள் உதட்டை அசைத்தனர்—வாலிபர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.

கொலம்பஸ், மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் அவனுடைய இளமையின் போது நடந்ததில்லை. அவன் உள்ளத்திலே. உலகப் போக்கையே மாற்றி அமைக்கக் கூடிய ஓர் திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று எண்ணும்படியான நடவடிக்கைகளும் அவனுடைய இளம் பருவத்திலே கிடையாது.

அவன் உடன் பிறந்தானொருவன்; பார்த்தலோ மியோ எனும் பெயருடையான், மரக்கலக்காரருக்கு உபயோகமாகும், படங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான், லிஸ்பன் நகரில்.

கொலம்பஸ், ஒரு பிரபல இத்தாலியக் கடற்படை அதிகாரியின் மகளைக் கலியாணம் செய்து கொண்டான். அதனால், கடல்மார்க்கம், தொலைவிலுள்ள தீவுகளின் வரலாறு, வாணிபம், போன்ற துறைகளைப் பற்றிய கருத்து வளர வழி பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/25&oldid=1770422" இலிருந்து மீள்விக்கப்பட்டது