உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பாரம்

23

இந்த இரு தொடர்புகளைக் கொண்டு, உலகம் புகழும் செயலைச் செய்துவிட முடியாது, எனினும், கொலம்பசின் மனதிலே, இந்தத் தொடர்புகளின் காரணமாக, புதிய நாடுகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டான். எத்தனை இரவுகள் தூக்கம் வராமல் புரண்டானோ! எத்தனை நாட்கள். ஊன் மறந்து உள்ளத்தோடு போராடினானோ! அவன் மனதிலே, மாபெருந் திட்டம் உருவாவதற்குள், விவரிக்க முடியாத புயலும் தென்றலும் மாறி மாறிக் கிளம்பித்தான் இருக்கும்.

அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்துவிட்டது கொலம்பசுக்கு, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்றால், புதிய நாடுகளைக் காண முடியும் என்ற நம்பிக்கை. இதனை அவன் முதலிலே கூறியபோது பலரும் நையாண்டி செய்தனர். கொலம்பஸ் மனம் ஒடிந்து போகவில்லை. மேலும் மேலும் அதனையே கூறினான், பலரிடம்; பன்னிப் பன்னி, கெஞ்சினான் தன்னை நம்பும் படி; வேண்டிக்கொண்டான். தன் திட்டத்தைப் பரீட்சை பார்க்கும்படி; போடா பைத்தியக்காரா! உள்ள உலகம் போதும்— நீ ஒன்றும் நீ ஒன்றும் புதிய உலகத்தைக் கண்டுபிடிக்க வேண்டாம்!—என்று கேலி செய்தனர். பயல், பலே அண்டப் புளுகன்! ஆயிரமாயிரம் தடவை கடற்பயணம் செய்தவர்களெல்லாம் கூறாததைக் கூறுகிறான், தைரியமாக! அட்லாண்டிக் கடலைத் தாண்டிச் சென்றால், அற்புதமான பல நாடுகள் உள்ளனவாம்—யாரும் காணாதவைகளாம்—அளக்கிறான் கதை! என்று அலட்சியமாகப் பேசினர், கொலம்பஸ் சலித்துப் போக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/26&oldid=1770428" இலிருந்து மீள்விக்கப்பட்டது