இரும்பாரம்
25
கள்—உமக்கு நான் புதிய, பெரிய ராஜ்யத்தைக் காணிக்கையாகத் தருகிறேன்”—என்றான். மன்னனுக்கு எப்படியோ ஓர்வித நம்பிக்கை பிறந்தது. “அங்ஙனமே ஆகுக! நீ, ஏதேனும் புதிய ராஜயத்தைக் கண்டுபிடித்தால், உன்னையே தளபதியாக்குகிறேன்—அந்தப் புதிய ராஜ்யத்தின் வருவாயிலே. பத்திலோர் பாகம் உனக்குப் பரம்பரையாக அனுபவிக்கும் உரிமை தருகிறேன். வெறுங்கையுடன் திரும்பினால். பரிசுமில்லை...” என்றான் பெர்டினாண்டு. கனவு உலகிலிருந்து நிஜ உலகு வந்தவனானான் கொலம்பஸ்.
கலங்கள் கிளம்பின! கண்களிலே ஆர்வ ஒளி வீசிற்று! கலங்கள் சென்றன, சென்றது. நெடுந்தூரம்—கண்ணிக்கெட்டிய தூரம், கடலேதான்! வழக்கமாக கடற்பயணம் செய்யும்போதும். வாணிபத்துக்காகப் போகும்போதும் காணக் கூடியப் பிரதேசங்களெல்லாம் மறைந்துவிட்டன; எதிரே கடல்! கொலம்பஸ், செல்கிறான், நம்பிக்கையுடன், தொலைவில், பெரியதோர் பூபாகம் இருக்கிறது! வாருங்கள், காட்டுகிறேன்! என் கணக்குப் பொய்யல்ல! என் திட்டம் கனவல்ல! என் முயற்சி வீண் போகாது ! என்று ஆவேசத்துடன் பேசுகிறான். கண்ணெதிரே கடலன்றி வேறு காணாத, உடனிருந்தோரின் உள்ளத்தில், சலிப்பு, வெறுப்பு, திகில், கோபம் கொப்பளித்தது.!
இவனோர் பித்தன்! என்றனர் அவர்களும்.
அந்தப் பித்தன் மனதிலே மட்டும் இருந்த உலகம் தான், இன்று உலகினர் கண்டு அதிசயிக்கும் அமெரிக்காக் கண்டம்.