உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கதம்பம்

எதற்கும் அஞ்சாமல், சென்றான்;

அதோ ஓர் இடம்! தரை! நிலம்! பிரதேசம்! ராஜ்யம்!—ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான பெயரிட்டுக் கூவினர். களித்தனர். கூத்தாடினர், “பித்தன்! நான் பித்தன்! அல்லவா?” என்று கேட்டது, கொலம்பசின் பார்வை. கொலம்பஸ், தான் கண்டுபிடித்த அந்த இடத்திற்கு, செயின்ட் சால்வடார் என்று பெயரிட்டு அங்கு ஸ்பெயின் நாட்டுக்கொடியை நாட்டினான்! வெற்றி தந்த உற்சாகத்தால், மேலும் தொடங்கினான் பயணத்தை! வேறு பல இடங்கள்! புதிய புதிய தீவுகள்! எல்லாம் ஸ்பெயினுக்குச் சொந்தமாக்கினான். ஸ்பானியக்கொடி பறந்தது, ஸ்பெயினுக்கு வெகு தொலைவில்! ஸ்பெயினுக்குப் புதிய புதிய ராஜ்யங்கள் கிடைத்தன—ஸ்பானிய அரசன் காணாத தேசங்கள்! உலகப் படத்திலே அதுவரை குறிக்கப்படாத நாடுகள்! கற்பனைக்கு எட்டாமலிருந்து வந்த தேசங்கள் அங்கெல்லாம் ஸ்பானிஷ் கொடி! அந்த இடங்கள், இயற்கை அழகும் செல்வமும் நிரம்பிய இடங்கள் எதிர்ப்புகள் இருந்தன! கொலம்பஸ், அவைகளைச் சமாளித்தான்.

பிறகு, திரும்பினான்! வெற்றிக்களை முகத்தில் தாண்டவமாட. கண்டுபிடித்த நாட்டுப் பொருட்குவியல் கலத்திலோர் பகுதியில் இருந்தது; அந்த நாட்டு மக்கள் சிலரையும் அழைத்து வந்தான்.

இந்த அற்புதமான வெற்றிக்குப் பிறகு தான். அரசன் பெர்டினாண்டும், அரசி இஸபெல்லாவும், கொலம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/29&oldid=1771163" இலிருந்து மீள்விக்கப்பட்டது