பக்கம்:கதாநாயகி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*101



தொப்பிக்காரச் சாயபு ஒருவர் பாதங்களில் கொதி எண்ணெயை ஊற்றிக் கொண்டிருப்பவர் போன்று வேர்க்க விறுவிறுக்க எங்கோ விரைந்தார்.

நல்லவேளை, அவர் மீது அவன் மோதிவிடவில்லை. விலகிக் கொண்டான். கையோடு கையினைத்து ஒயிலாடிக் கொண்டே சென்ற புது ஆங்கிலத் தம்பதி அவன் மீது மோதி விடவில்லை; தன் காதலியைக் கெட்டிக்காரத்தனமான காதலால் கட்டுண்டு கைப்பிடித்துச் சென்றான் காதலன். புதிய காதல் உறவு இணைத்த புது இணையாக அவர்கள் இருக்கலாம். அடுத்த விபத்தையும் சமாளித்தபடி அவன் ஹோட்டலைக் குறிவைத்து நடந்தான்.

ஹோட்டல் வாசலில் பிச்சைக்காரி ஒருத்தி தன் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கண்டதும், "தரும தொரையே!" என்று பல்லை இளித்தாள். அவளுக்கு விளம்பரப் பல்பொடியின் அருமை தெரியாது போலும்! அவன் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாயை அந்தத் தாய்க்குப் போட்டான். வெறிநாய் ஒன்று விழுந்தடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியது. அவன் சுற்றிலும் ஒரு முறை கண்ணோட்டம் பதித்தான். 'மனிதர்களிலே வெறியர்களைத் தடம் கண்டுகொள்வது இயலாத காரியம் போலிருக்கிறேதே?

ராமபவன் இட்டிலி என்றால் அம்பலத்தரசனுக்கு ஒரு பிடித்தம். இட்டிலிக்கு ஊற்றப்படும் சட்டினியின் மீதுள்ள பற்றுத்தான் இட்டிலியின் மீதும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டுத் திரும்பினான்; 'பில்' லை மட்டும் வாங்கிக் கொள்ளும் ஹோட்டல் அல்ல அது!...

வெற்றிலைபாக்குக் கடைக்கு வந்தான். இதுவும் அவனுக்கு ஒரு வாடிக்கைக்கடை இலக்கியச் சர்ச்சைக்குகந்த இடம் அது. அமரர் புதுமைப்பித்தனுக்கு அந்நாளில் இம்மாதிரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/111&oldid=1319050" இலிருந்து மீள்விக்கப்பட்டது